அஹ்லுல் பைத்தினரின் சிறப்பும்,அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியமும்.
The Virtues of Ahlul Bayt (as) and Why they have to be followed!
இறை தூதரும், இருதித் தூதருமான நபி ஸல்லல்லாஹு அலைஹிவஆலிஹி வஸல்லம் அவர்கள், உலக மக்கள் அனைவரை விடவும் சிறப்பும், அந்தஸ்தும் வாய்ந்தவர்களாவார்கள். அவர்களுக்கு அடுத்தபடியான சிறப்பும் அந்தஸ்தும் வாய்க்கப் பெற்றவர்களாக,அவர்களது பரிசுத்தகுடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினர் விளங்குகின்றனர் என்பதை அல்குர்ஆன் மற்றும், அல்ஹதீஸ் வாயிலாக நாம் தெளிந்துணர முடிகின்றது. அஹ்லுல் பைத்தினரின் பரிசுத்த தன்மை பற்றி அல்குர்ஆன் இவ்வாறு பறை சாற்றுகின்றது.
انما يريد الله ليذهـب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا
'நபியின் குடும்பத்தினரே! உங்களிலிருந்து அழுக்குகளை அகற்றி உங்களை முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகின்றான்;.' அல் குர்ஆன் -33. 33
மேலுள்ள இறைமறை வசனத்திற்கு முபஸ்ஸிரீன்கள் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர், பல்வேறு விதமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்;.நபிமணி (ஸல்) அவர்கள், இவ்வசனத்திற்குறிய சரியான விளக்கத்தை தமது வாழ்க்கை மூலமாகவும், வார்த்தை மூலமாகவும் தெளிவு படுத்தியிருக்கின்றார்கள்.
நபிகளாரின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா நாயகி அறிவிக்கின்றார்கள். ஒரு நாள் காலை, நபி ஸல் அவர்கள், கறுப்பு நிறப் போர்வையினால் தம்மைப் போர்த்திக் கொண்டு வெளியே வந்தார்கள். அப்போது, ஹஸரத் அலியின் மகனாராகிய இமாம் ஹஸன் வந்தார்கள். நபியவர்கள் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார்கள். அதன் பிறகு இமாம் ஹுஸைன்வந்தார்கள். நபியவர்கள், அவரையும் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார்கள். அதன் பிறகு ஹஸரத் பாத்திமா வந்தார்கள். நபியவர்கள் அவரையும் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார் கள். பின்னர் ஹஸரத் அலி வந்தார்கள். நபியவர்கள்,அவர்களையும் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார் கள். அதன் பின், நபியவர்கள் இத் திருமறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهـركم تطهيرا
நபிகளாரின் மனைவியருள் மற்றொருவரான உம்மு ஸல்மா நாயகி அறிவிக்கின்றார்கள். சூரா அஹ்ஸாபின் 33ம் இவ்வசனம், எனது வீட்டில் வைத்தே இறங்கியது. அப்போது என் வீட்டில் நபிகளாருடன் ஹஸ்ரத் அலி ஹஸ்ரத் பாத்திமா, இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ஆகியோர் இருந்தனர் நபியவர்கள்,இவர்கள் நால்வரையும் அழைத்து, தமது போர்லையினால் அவர்களைப் போர்த்தி விட்டு, இவ்வாறு பிரார்த்தித்தார்கள்.
اللهـم هـولاء اهل بيتي فاذهب عنهم الرجس وطهرهم تطهيرا
அல்லாஹ்வே ! இவர்களே எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்தினர். ஆகவே, அவர்களை விட்டும் அசுத்தங்களை அகற்றி, அவர்களை பரிசுத்தவான்களாக்கி வைப்பாயாக!
உம்மு ஸல்மா நாயகி தொடர்ந்து கூறுகின்றார்கள், அவ்வேலையில் நான் போர்வையை சற்று விலக்கி, இறைத்தூதர் அவர்களே! நானும் தங்களுடன் இல்லையா ? எனக் கேட்டேன். அதற்கு பிறகு நபி ஸல் அவர்கள்

இவ்வாறு கூறினார்கள்.
انت على مكانك وانت على خير
நீங்கள் உங்களது இடத்திலேயே இருந்து கொள்ளுங்கள். நீங்கள் நன்மையிலேயே இருக்கின்றீர்கள். (ஸஹீஹ் திர்மிதி பாக-5 பக்-251)
மேற்குறிப்பிடப் பட்டுள்ள திருமறை வசனத்தில் வந்திருக்கும் இன்னமா என்ற சொல் அரபு இலக்கணத்தில் மட்டுப் படுத்திக் கூறும் ஒரு சொல்லாகும். அதாவது பலர் இருக்கும் ஒரு இடத்தில் சிலரை மாத்திரம் விஷேசமாக குறிப்பிட்டுச் சொல்வதற்கு இச்சொல் பயன் படுத்தப் படும். இவ்வாறு மட்டுப் படுத்திச் சொல்வதற்கு அரபு இலக்கணத்தில் பல சொற்கள் இருக்கின்ற போதிலும் அவையனைத்திலும் மிக வலுவான சொல்லாக இந்த இன்னமா எனும் சொல் விளங்குகின்றது. எனவே இத் திரு மறை வசனத்தின் ஆரம்பத்தில் இச் சொல் வந்திருப்பது மிகவும் கருத்திற் கொள்ளத் தக்க அம்சமாகும். அதாவது இறைவன் பரிசுத்தமாக்க விரும்பும் அஹ்லுல் பைத்தினர்கள் இந்த ஐவர் மாத்திரமே! மற்றெவரும் இச் சிறப்புக்கு உரித்தாக மாட்டார்கள் என்பதையே இவ் வசனம் வலியுறுத்துகின்றது.
இவ் வசனத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ரிஜ்ஸ் எனும் சொல் அசுத்தம்,பாவம், தீமை போன்ற மோசமான விடயங்களனைத்தையும் குறிக்கக் கூடியதாகும். ஆகவே நபிகளாரின் குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்தினர் சகல விதமான மோசமான விடயங்களை விட்டும்பரிசுத்தமாக்கப்பட்டவர்களாவர்.
அவ்வாறே இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தத்ஹீர் எனும் சொல் அனைத்து விதமான பாவங்கள,; தீமைகள், அழுக்குகள், துர்க்குணங்கள் முதலியவற்றை விட்டும் முழுமையாக பரிசுத்தமாக்கி வைப்பதை குறிக்கக் கூடியதாகும். எனவே அஹ்லுல் பைத்தினர் அல்லாஹ்வினால் முழுமையான பரிசுத்தவான்களாக ஆக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர முடிகின்றது.
இத்தகைய பரிசுத்தவான்களும், ஒழுக்க சீலர்களுமாகிய அஹ்லுல் பைத்தின ரே, முஸ்லிம் சமுகத்தினரால் பின்பற்றப் படுவதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர் கள் என்றும், எனவே இவ் அஹ்லுல் பைத்தினரையே பின்பற்ற வேண்டுமென் றும் இஸ்லாத்திலே தெளிவாக வலியுத்தப் பட்டுள்ளது.
நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
يا ايها الناس اني قد تركت فيكم ما ان اخذتم به لن تضلوا كتاب الله وعترتي اهل بيتي
மனிதர்களே! நான் உங்கள் மத்தியில் விட்டுச் செல்பவற்றை நீங்கள் பின்பற் றுவீர்களானால் நிச்சயம் வழி தவறவே மாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதமும் எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்தினருமாகும்.(ஆதாரம் திர்மிதி பாக-2 பக்-308)

மேற் கூறப்பட்ட இந்த ஹதீஸை நபி ஸல் அவர்கள் அரபாவுடைய நாளின் போது கூறியதாகவும், அவர்களது அந்திம காலத்திலே மதினாவிலுள்ள அவர்களது வீட்டின் அறையில் வைத்து ஸஹாபாக்களுக்கு மத்தியில் கூறி யதாகவும், துல் ஹஜ் மாதம் 18ம் கதீர் கும் எனும் இடத்தில் வைத்துக் கூறியதாகவும் பல அறிவிப்புகள் ஹதீஸ் கிரந்கங்களில் வந்துள்ளன. மேற் கூறப்பட்ட அல்குர்ஆன் வசனமும், ஹதீஸ்களும்,அல்குர்ஆனையும், அஹ் லுல் பைத்தையும் பற்றிப் படித்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும், அதிலுள்ள முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.
நபி ஸல் அவர்கள் மற்றுமோர் முறை சொன்னார்கள்,
وانا تارك فيكم الثقـلين اولهما كتاب الله فيه الهـدى والنور فخذوا بكتاب الله واستمسكوا به فحث على كتاب الله ورغب فيه ثم قال واهل بيتي اذكركم الله فى اهل بيتي اذكركم الله فى اهل بيتي اذكركم الله فى اهل بيتي
( صحيح مسلم ج-2 ص238)
நான் பெறுமதியான இரு பொக்கிஷங்களை உங்கள் மத்தியில் விட்டுச் செல்கின்றேன் அவ்விரண்டில் முதலாவது அல்லாஹ்வின் வேதமான அல் குர்ஆன். அதிலே நேர்வழியும் பிரகாசமும் இருக்கின்றன. ஆகவே அல்லாஹ்வின் வேதத்தை எடுத்து அதனை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்க ள்! என்று கூறிய நபியவர்கள் அல்குர்ஆனை பின்பற்றுவதன் மீது உணர்வூட்டிஅதிலே ஆர்வத்தையும் ஏற்படுத்தினார்கள். பின்பு சொன்னார்கள், இரண்டாவது பெறுமதியான பொக்கிஷம் என்னுடைய குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினர். எனது அஹ்லுல் பைத்தினர் விடயத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன். எனது அஹ்லுல் பைத்தினர் விடயத்தில் நான் உங்களு க்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன். எனது அஹ்லுல் பைத்தினர் விடயத்தில் நான் உங்ளுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன். (ஆதாரம் சஹீஹ் முஸ்லிம் பாக-2 பக்-238)
அஹ்லுல் பைத்தினரை பின்பற்றுகின்ற விடயமானது ஒரு சாதாரண விடயமல்ல. மாறாக அது இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையோடு ஒன்றிப் போயுள்ள மிக முக்கியமான அம்சமாகும். ஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களுள், அல்குர்ஆனுக்கு அடுத்த படியாக அஹ்லுல் பைத்தினரே இடம் பெறுகின்றனர் என்பதற்கு மேலுள்ள ஹதீஸ்கள் வலுவானஆதாரங்களாகத் திகழ்கின்றன. எனவே அல்குர்ஆனும், அஹ்லுல் பைத்தும் எப்போதும் ஒன்றையொன்று பிரிந்து விடாமல் இணைந்தே இருக்கும்.
இது பற்றி நபி ஸல் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்,
اني تركت فيكم ما ان تمسكتم بهما لن تضلوا بعدى ابدا كتاب الله وعترتى اهل بيتي انهما لن يفترقا حتى يردا علي الحوض
நான் விட்டுச் செல்லக் கூடிய இரு பொருட்களை நீங்கள் பற்றிப் பிடித்துக்கொள்வீர்களானால், எனக்குப் பின் எப்போதும் நீங்கள் வழி தவற மாட்டீர்க ள். அவை அல்லாஹ்வின் வேதமாம் அல்குர்ஆனும் எனது குடும்பத்தினரா ம் அஹ்லுல் பைத்தினருமாகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கௌத ரிடத்தில் என்னை வந்தடையும் வரை ஒன்iறையொன்று பிரியவே மாட்டாது.
ஆகவே முஸ்லிம்கள் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டிய முதன்மையான இரு அம்சங்களாக, அல்குர்ஆனும் அஹ்லுல் பைத்தினரும் விளங்குகின்றனர். இவ்விரு விடயங்களையும் ஏற்று பின்பற்ற வேண்டியது,அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும். ஒன்றை விட்டு மற்றொன்றை மாத்திரம் ஏற்றுக் கொள்பவர் பூரண முஸ்லிமாக ஆகும் தகுதியை இழந்து விடுகின்றார்.
ஒரு பறவை பறப்பதற்கு இரண்டு இறக்கைகள் அவசியம். அவற்றில் ஒன்றை இழந்தாலும் அது பறக்கும் தகுதியற்றதாக மாறி விடும். அவ்வாறே ஒரு முஸ்லிம் இஸ்லாமிய வாழ்வில் முழுமையாக நுழைவதற்கு அல்குர்ஆன், அஹ்லுல் பைத் ஆகிய இரு விடயங்களும் அவசியமாகின்றன.

முஸ்லிம்கள் வழிகேட்டிலே வீழ்ந்து விடாமல் இருப்பதற்கும், மூடக் கொள் கைகளில் மூழ்கி விடாமல் தவிர்ந்து கொள்வதற்கும், நேர்வழியிலே நிலைத் திருப்பதற்கும் நபி ஸல் அவர்கள் விதித்திருக்கும் நிபந்தனை, அல் குர்ஆன்,அஹ்லுல் பைத் ஆகிய இரண்டையும் பின்பற்றுவதாகும்.
அதே வேளை, அல் குர்ஆனுக்கும் அஹ்லுல் பைத்தினருக்குமிடையிலான வேறுபாடுகளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே படித்தரத்தில் உள்ளவையல்ல. மாறாக குர்ஆன் முதலாவது படித்தரமென்றால்,அதற்கடுத்த படித்தரத்திலே அஹ்லுல் பைத்தினர் இருக்கின்றனர். அல்குர்ஆனுடைய வசனங்களுக்கும், அவற்றினது கருத்துகளுக்கும் மிகச்சரியான விளக்கவுரைளாகவே அஹ்லுல் பைத்தினர் விளங்குகின்றனர்.
ஏனெனில் குர்ஆன் அல்லாஹ்வினது மிகப் பெரும் அற்புதமாகத் திகழ்கின்றது. 1400 ஆண்டுகளுக்கு மேலாகியும் அது அணுவளவும் மாறா திருப்பதும், அதில் அணுவளவும் மாற்றங்கள் செய்யப்படாதிருப்பதும் அதன் மாபெரும் அற்புதத் தன்மைக்கு சான்றாக விளங்குகின்றது. இதே குர்ஆன் தான் அன்றைய நபிகளாருடைய காலத்திலும் இருந்தது. இன்றும் இருக்கின்றது. இனி மேலும் இருக்கப் போகின்றது.
ஆனாலும் இன்றைய காலத்தில் குர்ஆனுக்கு எதிரான பிரசாரங்கள் பரவலாகவும், பகிரங்கமாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. குர்ஆன் திரிபுக்கு ள்ளாக்கப்பட்டுள்ளது என்றும் அதை சிலர் மாற்றி விட்டார்கள் என்றும் சில தீய சக்திகள் வாய் கூசாது பேசி வருகின்றன. இவ் இழிவான விடயத்தில் எமது முஸ்லிம் சகோதரர்கள் சிலரும் இணைந்து செயற்படுவது மிகவும் வேதனை தரும் செயலாகும்.
இவ்வாறு பிரசாரம் செய்யக் கூடியவர்கள் நானே குர்ஆனை பாதுகாப்பேன் என்று கூறியுள்ள அல்லாஹ்வின் கூற்றை நிராகரிக்கின்றார்கள். குர்ஆனில் உள்ளதைப் போன்ற ஒரு வசனத்தையேனும் உங்களால் கொண்டு வர முடியாது, என்ற குர்ஆனின் கூற்றை மறுத்துரைக்கின்றார்கள். அல்லாஹ் தான் இறக்கி வைத்த குர்ஆனை பாதுகாக்க இயலாத பலவீனன் என்று ஒப்புக் கொண்டு விடுகின்றார்கள் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே மாற்றப்படாததும், மாற்றப்பட முடியாததுமான மிக அற்புதமான வேதமாக அல் குர்ஆன் விளங்குகிறது. அந்த குர்ஆனுக்கு விளக்கவுரையா கவே நபிகளாரினதும், அவர்களது பரிசுத்த குடும்பத்தினரதும் வாழ்க்கை முறைகள் அமைந்திருக்கின்றன.
அஹ்லுல் பைத்தினர் எனும் பரிசுத்த வரையறைக்குள் நபி ஸல், ஹஸரத் அலி, ஹஸரத் பாத்திமா, ஹஸரத் ஹஸன், ஹஸரத் ஹுஸைன் ஆகியோர் அடங்குகின்றனர். ஆகவே, இப்பரிசுத்தவான்களின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதும் மிக முக்கியமான அம்சமாகும்.
நபி (ஸல்) அவர்கள்
தமது 40ம் வயதில் நுபுவ்வத் எனும் நபித்துவத்தை பெற்றுக் கொண்ட நபி ஸல் அவர்கள் பல சிரமங்கள், எதிர்ப்புகளுக்கு மத்தி யில் இஸ்லாமிய மார்க்கத்தை கட்டியெழுப்பி மக்கள் நரகிலிருந்து கரை சேரும் விடயத்தை தெளிவு படுத்தினார்கள் என்பதை வரலாறுகளில் அறிந்திருக்கின்றோம். நபியவர்கள் எவ்வித குறைபாடுகளும், தவறுகளும் அற்றவர்களாகஇருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்கள், நபிமார்கள், ரசூல்மார்கள், ஏன் மலக்குமார்களை விடவும் உயர்ந்தவர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். நபி ஸல் அவர்களில் ஒரு குறைபாடு இருக்குமானால், அவர்களைத் திருத்துவதற்கு வேறு ஒருவர் தேவைப்படுவார். அவ்வாறு திருத்துபவரில் ஏதாவது குறைபாடுஇருக்குமானால் அவரைத் திருத்துவதற்கு இன்னொருவர் தேவைப்படுவார். இவ்வாறு அந்த சங்கிலித் தொடர் சென்று கொண்டேயிரு க்கும். மக்களும் அழிவுப் பாதை நோக்கி சென்று கொண்டேயிருப்பார்கள். ஆனால் நபி ஸல் அவர்களோ எவ்வித அழுக்குகளும், குறைபாடுகளும் அற்ற, பூரணத்துவம் பெற்ற ஒரு இறைத் தூதராக விளங்குகின்றார்கள்.
நபியவர்கள் தமது விpருப்பத்திற்கேற்பவோ, தமது மனோ இச்சைப்படியோ எதையும் கூறுவதில்லை. நபியவர்கள் தமது சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தையும் அல்லாஹ்வினது ஆணையின், அல்லது அனுமதியின் பிரகாரமே மேற் கொள்வார்கள். இது பற்றி புனித குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

وما ينطق عن الهـوى ان هـو الا وحي يـوحى
வஹி அவருக்கு அறிவிக்கப்பட்டாலேயன்றி, அவர் தன் மனோ இச்சைப்படி எதையும் பேசுவதில்லை (அல் குர்ஆன் 53:3,4)
எனவே நபி ஸல் அவர்கள் தமது ஒவ்வொரு செயற் பாட்டையும் அல்லாஹ்வுடைய அங்கீகாரத்துடனேயே மேற் கொண்டார்கள். அல்லாஹ்வுடைய தூதுத்துவத்தை பிரசாரம் செய்யக் கூடியவர்களாகவும்,அவனது இரகசியங் களை பாதுகாக்கக் கூடியவர்களாகவும் முழுமையானநற்குண சீலராகவும் ஒப்பற்ற ஒரு நபியாகவுமே அவர்கள் வாழ்ந்தார்கள். அத்தகைய நபியவர்களே அஹ்லுல் பைத்தினரின் முதலாமவராக இருக்கி ன்றார்கள்.
ஹஸரத் அலி (அலை) அவர்கள்
அபூ தாலிப், பாத்திமா பின்த் அஸத் ஆகிய தம்பதியருக்குப் பிறந்த இணையற்ற மாவீரரே இமாம் அலி (அலை) அவர்கள் ஆவார்கள். அல்லாஹ்வினது மாபெரும் இல்லமான கஃபாவுக்கு உள்ளேயே பிறந்தார்க ள். இது மிகப் பெரும் அற்புதமும், பாக்கியமுமாகும். அவர்கள் பிறந்தவுடன் அவர்களை எடுத்துக் கொண்டு வந்த தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்கள்நபி ஸல் அவர்களது கையிலேயே முதன் முதலாகக் கொடுத்தார் கள். ஹஸரத் அலி கண் திறந்து பார்க்கின்றார்கள், நபிகளாரின் திரு முகத் தையே முதலாவதாக காண்கின்றார்கள். இதுவும் அவர்களுக்கு கிடைத்த மற்றுமோர் அற்புதமாகும். இமாம் அலி பிறந்தது தொடக்கம் சிறு பராயம் முழுவதையும் நபிகளாரின் வீட்டிலேயே கழித்தார்கள். நபிகளாரின் கண்காணி ப்பிலேயே வளர்ந்தார்கள்.
நபியவர்கள், இஸ்லாமிய பிரசாரத்தை ஆரம்பித்த போது, பெண்களில் அதனை முதன் முதலாக ஏற்றுக் கொண்ட பெருமைக்கு உரித்துடையவர் அன்னை கதீஜா நாயகியாவார்கள். அவ்வாறே, சிறுவர்களில் ஹஸ்ரத் அலி (அலை)அவர்களாவார்கள். இஸ்லாமிய வரலாற்றை ஆராயும் போது,நபிகளாரின் இஸ்லாமிய பிரசாரத்திற்கு மூன்று வகையான காரணிகள் உறுதுணையாக இருந்து வந்துள்ளதை, நாம் அறிய முடியும். அம் மூன்றுமாவன,
1. நபியவர்களின் நற்குணம்.
2. கதீஜா பிராட்டியாரின் பொருளாதாரம்.
3. அலியின் தந்தையாகிய அ)தாலிப் அவர்களின் வீரமும் பாதுகாப்பும்.
கதீஜா நாயகி அவர்களும், அ)தாலிப் அவர்களும், நபிகளார் மீது மிக்க அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார்கள்;. அவர்களுக்காக பல சிரமங்களையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். அதனால்,அவர்களிருவரும் ஒரேயாண்டில், ஒருவர் பின் ஒருவராக வபாத்தான போது,நபிகளார் கடுந்துயருற்றார்கள். உள்ளம் வெதும்பினார்கள். அவ்வாண்டுஆமுல்ஹுஸ்ன் சோக ஆண்டு என, வரலாருகளில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கதீஜா நாயகியார் தமது திரண்ட சொத்துகளையெல்லாம் இஸ்லமிய பிரசாரத்திற்காக மனமுவந்து வழங்கினார் கள். அபூ தாலிப் அவர்கள் நபிகளாருக்கு ஏதும் ஆபத்துகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு அரணாக செயற் பட்டார்கள். நபிகளார் தொழுகின்ற போது குறைஷிக் காபிர்கள் அவர்களது புனித முதுகிலே ஒட்டகத்தின் அழுகிய குடல்களையெல்லாம்கொண்டு வந்து கொட்டுவார்கள். அபூ தாலிப் அவர்கள் அதனை அறிந்தவுடன் உருவிய வாளோடு அவ்விடத்திற்கு விரைந்து வருவார்கள். அபூ தாலிப் அவர்களின் ஆக்ரோஷமான நிலையைக் காணும் காபிர்கள் அச்சமுற்று அங்கிருந்து பின் வாங்கி ஓடி மறைந்து விடுவார்கள்.
இஸ்லாமிய பிரசாரம் தீவிரமடைவதை அவதானித்த குறைஷிக் காபிர்கள் அதற்கு முட்டுக் கட்டையிட தீர்மானித் தனர். நபிகளாரையும் அவர்களது பரம்பரையினரையும் ஷிஃபு அபூ தாலிப் எனும் பள்ளத் தாக்கில் ஒதுக்கி விட்டு பொருளாதார தடையும் விதித்தனர். அங்கு உணவுத் தட்டுப்பாடுகளினாலும், உடல் ஆரோக்கியமின்மையினாலும் நபியவர்களும்,அவர்களது பரம்பரையினரும் பல அல்லல்களையும் ஆபத்துகளையும் எதிர் நோக்கினர்.
அங்கிருக்கும் வரையில் நபியவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை யென்பதை உணர்ந்து கொண்ட அபூ தாலிப் அவர்கள் நபிகளாரை காப்பா ற்றுவதில் மிக்க உறுதியுடன் செயற்பட்டார்கள். அதன் படி இரவு நேரங் களில் தூங்குகின்ற போது நபிகளார் தூங்கும் இடத்தில் அலியையும் அலி தூங்கும் இடத்தில் நபிகளாரையும் மாற்றித் தூங்க வைப்பார்கள். ஏனெனில் நபிகளாருக்கு ஏதாவது ஆபத்துக்கள் வருமானால் தன் அன்பு மகனார்அலியை பலியிட்டாவது அந்த ஆபத்திலிருந்து நபிகளாரைக் காபாற்ற வேண்டும் என்று அபூ தாலிப் உறுதி பூண்டிருந்தார்கள். இதன் மூலம் நபிகளாரின் மகத்துவத்தையும் அவர்களது தூதுத்துவத்தையும் அதன் உண்மை நிலையையும் அபூ தாலிப் அவர்கள் கூட விளங்கியிருந்தார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய வீரம், தியாகம் இரண்டையும் ஒன்று சேரப் பெற்றிருந்தவரான அபூ தாலிப் அவர்களை தந்தையாகக் கொண்டு, தந்தையின் நல்லியல்புகளை பன்மடங்காகப் பெற்று பிறந்தவர்களேஹஸரத் அலி அவர்களாவார்கள். அதனால் இஸ்லாத்திற்காக தமது உயிரையும் துச்சமாகக் கருதிச் செயற்படக் கூடிய மாபெரும் மனத் துணிவு அவர் களிடம் நிறைந்து காணப்பட்டது. நபிகளாருடைய ஹிஜ்ரத் நிகழ்வின் போ தும், இந் நிகழ்வை நாம் அவதானிக்க முடிகின்றது. தாம் வபாத்தாகும் வரை இஸ்லாத்தின் காவலராகவும் இஸ்லாத்திற்காக தம்மை முழுமை யாகஅர்ப்பணித்துக் கொண்ட தியாகியாகவும் வாழ்ந்த ஹஸரத் அலி அவர்கள் இறை தியாகியாகவே வபாதாகினார்கள்.
ரமழான் மாதம் 19ம் நாள் சுபஹ் தொழுகைக்காக மஸ்ஜிதுக்குச் சென்ற போது இப்னு முல்ஜம் எனும் கொடியவன் நஞ்சு தடவிய வாளினால் அலியினது உச்சந் தலையிலே ஓங்கி வெட்டினான். அந்த ஆக்ரோஷமான தாக்குதலைத் தாங்கிக் கொண்டு அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்.
فـزت ورب ا لكـعـبـه
கஃபாவுடைய இரட்சகன் மீது ஆணையாக நான் வெற்றி பெற்று விட்டேன்.
இவ்வாறு கூறிய ஹஸ்ரத் அலி அவர்கள் அதன் பின் இரு தினங்க ளில் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு இறைவனின் சந்நிதியை சென்றடைந்தார்கள்.
ஹஸரத் பாத்திமா (அலை) அவர்கள்
நபிகளாருக்கும் அன்னை கதீஜா நாயகியாருக்கும் பிறந்த ஹஸரத் பாத்திமா அவர்கள் சுவர்க்கத்துப் பெண்களுக்கௌ;ளாம் தலை சிறந்த தலைவியாகத் திகழ்கின்றார்கள். அவர்களை தலைவியாக அடையப் பெற்றிருப்பது பெண்கள் சமுகத்துக்கு கிடைத்துள்ள மிகப் பெரும் வர ப் பிரசாதமேயாகும். ஏனெனில் பாத்திமா அவர்கள் அளவற்ற சிறப்புகளும் மான்மியங்களும் கொண்டவர்களாவார்கள்.அவர்கள் பிறக்கின்ற போது கதீஜா நாயகிக்கு பிரசவம் பார்ப்பதற்காக சுவர்க்கத்திலிருந்து பெண்கள் வந்ததாகவும்,அவர்கள் மூலமே பிரசவம் நடை பெற்று பாத்திமா பிறந்த தாகவும் ஹதீஸ் கிரந்தங்களில் அறிவிக்கப் பட்டுள்ளன. பாத்திமா நாயகி யைப் பற்றி நபி ஸல் அவர்கள் சொல்லிக் காட்டினார்கள்.
فاطمه بضعة مني فمن آذاهـا فـقـد اذاني ومن احبـها فـقـد احبني

பாத்திமா எனது உடலின் ஒரு துண்டாவார் ஆகவே யார் அவரை வரு த்துகின்றாரோ அவர் என்னை வருத்தியவராவார். யார் அவரை நேசிக்கி ன்றாரோ அவர் என்னை நேசித்தவராவார்.(ஆதாரம் திர்மிதி)
பாத்திமாவை வேதனைப் படுத்துவது நபிகளாரை வேதனைப் படுத்துவது போன்றாகும். எனவே பாத்திமா நாயகியார் மிக்க மென்மையான சுபாவம் கொண்டவர்களாகவும் அனைவராலும் நேசிக்கவும் பின்பற்றவும் பட வேண் டிய அவசியம் உள்ளவர்களாகவும் விளங்குகின்றார்கள். தன்னுடைய மகள் என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு சொல்ல வில்லை. தன்னுடைய மகள்என்பதற்காக மட்டும் நபியவர்கள் பாத்தி மாவின் மீது அளவற்ற அன்பு காட்டவில்லை மாறாக இவையனைத்தை யும் இறைவனுடைய வஹியின் பிரகாரமே நபியவர்கள் புரிந்தார்கள். ஏனெனில் நபிகளாரின் ஒவ்வொரு கூற்;றும் அல்லாஹ்வினது ஆணையாக வோ, அங்கீகாரமாகவோதான்அமைந்திருக்கும் என்பதை ஏற்கனவே நாம் அறிந்துள்ளோம்.
இவ்வாறு நபிகளாருடன் இறுக்கமாக பாசப் பிணைப்பைக் கொண்டிருந்த பாத்திமா நாயகியவர்கள் ஹஸரத் அலியை மணமுடித்தார் கள். ஹஸன் ஹுஸைன் உற்பட ஐந்து குழந்தைகளுக்கு தாயாகவும் ஆனார்கள். இஸ்லாத்திற்காக தம்மாலியன்;ற அனைத்து தொண்டுகளையு ம் புரிந்தார்கள். அனைத்து சோதனைகளையும், நெருக்கடிகளையும் அக மகிழ்வுடன் தாங்கிக் கொண்டார்கள். பெண்கள் சமுதாயத்திற்கு மிகச் சிறந் த முன் மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.
பல சிறப்புகளையும், மகத்துவங்களையும் கொண்ட அன்னை பாத்திமா அவர்கள், அன்புத் தந்தை நபி ஸல் அவர்கள் வபாத் தான ஆறு மாதங்களின் பின் தாமும் வபாத்தாகி நபிகளாருடைய குடும்ப த்தில் மரணத்தின் பின் நபி ஸல் அவர்களை முதன் முதலில் சந்திக்கும் பாக்கியத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
இமாம் ஹஸன்(அலை) அவர்கள்
நபி (ஸல்) அவர்களது முதலாவது பேரக் குழந்தையும், ஹஸரத் அலி-பாத்திமா தம்பதியரின் முதலாவது ஆண் குழந்தையும் இமாம் ஹஸனாவார்கள். சிறு வயது முதலே, நபிகளாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இமாம் ஹஸன் நபியவர்களது இஸ்லாமிய நடைமுறைகளைஉன்னிப்பாக அவதானித்து, அதன்படியே தாமும் வாழ முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இமாம் ஹஸனின் சிறப்புப் பற்றி நபியவர்கள்,இவ்வாறு கூறியுள்ளார்கள்
ان هـذا ابني سـيد يصلـح بين فئتين عظيمتين
என்னுடைய இந்த மகன் ஒரு தலைவராவார். இவர் பிற்காலத்தில்,இரண்டு பெரும் கூட்டங்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துவார்.
இந்த ஹதீஸுக்கேற்பவே பிற்காலத்தில் முஆவியா ஆட்சிக்கு வந்தபோது இமாம் ஹஸன் பெருமனதுடன் ஆட்சியை விட்டுக் கொடுத்தார்கள். முஸ்லிம்களுக்கிடையில் யுத்தம் மூழ்வதை, அவர்கள் விரும்பவில்லை. மிகவும் சாதுரிய மான சுபாவம் கொண்டவர்களாக இருந்த அவர்கள்,அனைவரோடும் அன்பாகவும்,பாசத்துடனும் நடந்து கொள்ளக் கூடிய நற்குணமுள்ளவர்களாகவும் விளங்கினார்கள்.
ஆயினும் உமையாக்கள் சிலர் சதித்திட்டம் தீட்டி இமாமின் மனைவிக்கு ஆசை வார்த்தைகள் கூறி, அவளை தன்பக்கம் சாய்த்தெடுத்தனர். பின் அவள் மூலமாக இமாம் ஹஸனுக்கு உணவில் நஞ்சு கலந்து கொடுத்து, அவர்களை ஸஹீதாக்கி விட்டனர்.

இமாம் ஹுஸைன்(அலை) அவர்கள்
நபிகளாரின் இரண்டாவது பேரரான இமாம் ஹுஸைன் அவர்களது,வாழ்வின் ஆரம்பமும், முடிவும் ஜிகாத் எனும் புனித யுத்தத்துடனேயே தொடர்பு பட்டிருந்தன, ஹஸரத் அலி அவர்கள், இஸ்லாத்தின் முதல் யுத்தமான பத்ர் யுத்தத்திற்குச் சென்று இஸ்லாமிய விரோதிகள் பலரைவெட்டியழித்து விட்டு இரத்தம் படிந்த வாளோடு வீடுதிரும்புகின்றார்கள். அப்போதுதான் இமாம் ஹுஸைன் பிறந்திருக்கின்றார்கள்.இமாம் ஹுஸைன் கண்திறந்து பார்க்கின்றார்கள். இரத்தம் படிந்த வாளோடு, தம் தந்தையைக் காண்கின்றார்கள்.
எனவே இமாம் ஹுஸைன் ஜிகாத்துடன் தொடர்புபட்டே பிறந்திருக்கின்றார்கள். உண்மைக்காக உயர்த்திய வாளையே முதன் முதலில் கண்டார்கள். அதே போன்று அவர்களது இறுதி நிலையும் ஜிஹாதாகவே அமைந்திருந்தது. இஸ்லாத்தையும் அதன் புனிதத்துவத்தையும் பாதுகா ப்பதற்கு, வாளேந்தியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது அவர்கள் வாளெடுத்துப் போரிட்டார்கள். அதிலேயே தம் இன்னுயிரை அர்ப்பணித்து, உலகம் போற்றும் உத்தம தியாகியாக ஷஹீதானார்கள்.
இமாம் ஹுஸைனின் யதார்த்தத் தன்மை பற்றி, நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.
حسـين مني وانا من حـسـين احب الله من احب من حسـينا
ஹுஸைன் என்னில் உள்ளவர். நான் ஹுஸைனில் உள்ளவர் ஹுஸைனை யார் விரும்புகின்றாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புவானாக! (ஆதாரம் ஸஹீஹ் திர்மிதி)
நபி ஸல் அவர்களிலே, எவ்வித குறைகளும் இல்லையென்பதை ஏற்கனவே அறிந்தோம். அத்தகைய நபியால் தந்தையாக இருந்து வளர்க்கப்படடவர்கள் பாத்திமா. அத்தகைய நபியால் சகோதரராகவும்,மாமனாராகவும் இருந்து வளர்க்கப்பட்டவர்கள் ஹஸரத் அலி, எனவே நபிகளாரின் வளர்ப்பில் ஏதும் குறை காண முடியுமா? நிச்சயமாக முடியாது. நயியவர்களால் பாட்டனாராக இருந்து வளர்க்கப்பட்டவர்கள் ஹஸன்,ஹுஸைன். நபியவர்களால் குடும்பத்தலைவராக இருந்து காண்பிக்கப்பட்ட குடும்பத்தினர் அஹ்லுல் பைத்தினர். எனவே நபிகளாரின் கண்கானிப்பில் ஏதும் குறைகாண முடியுமா? நிச்சயமாக முடியாது. நபிகளாரின் பயிற்சிப் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் தான் அவர்களது பரிசுத்த அஹ்லுல்பைத்தினர். எனவே, குறைகளோ தவறுகளோ பாவங்களோ இருப்பதென்பது முற்றிலும் சாத்தியமற்றது.
மாறாக அவ் அஹ்லுல் பைத்தினர், பாவங்களை விட்டு பரிசுத்தமா க்கப்பட்டவர்களாகவும், முஸ்லிம் சமூகத்தினால் பின்பற்றப்பட வேண்டியவர்கள் என்று அல்லாஹ்வினால் சுட்டிக்காட்டப்பட்டவர்களாகவும்,முஸ்லிம்களை பாதுகாக்கக் கூடிய ஈடேற்றக் கப்பல்கள் என நபியவர்களினால் புகழ்ந்துரைக்கப்hட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
அத்தகைய அஹ்லுல் பைத்தினரை ஏற்றுப் பின்பற்றுவதே எம்மை நேரான வழிக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். மாறாக, அஹ்லுல் பைத்தினரை புறக்கணிப்பதென்பது எம்மை வழிகேட்டிலேயே தள்ளி விடக் கூடியதாகும். எனவே, அஹ்லுல் பைத்தினரை பூரணமாக அறிந்து, அவர்களை முழுமையாகப் பின்பற்றி, நேர்வழி பெற்று அதில்நிலைத்திருப்போமாக!
அதற்கு இறைவன் துணை புரிவானாக!