தவஸ்ஸுல் (வஸீலா தேடுதல்) (Seeking Waseela)
வஸீலா தேடுவதென்பதும் ஷபாஅத்தைப் போன்ற ஓர் அம்சமே. இது, இறைநேசர்கள், இறைவனின் அனுமதிப் பிரகாரம் எமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இறை சந்நிதானத்தில் உதவுவதையே குறிக்கிறது. அதாவது, நாம் அல்லாஹ்வையே விளித்து, பிரார்த்தனையில் ஈடுபடுகின்றோம். மறுபுறம் இறைநேசர்களை நமது பிரார்த்தனைக்கான உதவியாகக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.
''இன்னும், நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொண்டு உம்மிடம் வந்து, பின்னர் அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்புக்கோரி, அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை ஏற்பவனாகவும் மிகக் கிருபையுடையவனாகவும் அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள். (04:64)
நபி யூசுபின் (அலைஹிஸ்ஸலாம்) சகோதரர்கள், தமது தந்தையை வஸீலாவாகக் கொண்டு, தாம் செய்த குற்றத்திற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினார்கள். அவர்கள், தம் வயோதிபத் தந்தையான ஹஸ்ரத் யஃகூப் நபியை (அலைஹிஸ்ஸலாம்) நோக்கிக் கூறினார்கள்:
எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு நீங்கள் எங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவீர்களாக. நிச்சயமாக நாம் குற்றவாளிகளா வோம். (12:97)
நபி யஃகூபும் அலைஹிஸ்ஸலாம் தமது மக்களின் வேண்டுகோளை ஏற்று அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுவதாகக் கூறினார்கள்.
''நான் விரைவில் என் இறைவனிடத்தில் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். (12: 98)
இது போன்ற ஆதாரங்கள் அனைத்தும் வஸீலா என்பது முன் சென்ற உம்மத்தாரின் வழிமுறையாக இருந்தது என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன.
ஆயினும், வஸீலாவுடைய சந்தர்ப்பங்களில் எல்லைகளை சரியாகப் பேணிக் கொள்வது மிக இன்றியமையாத அம்சமாகும். இறைநேசர்கள், அனைத்து விடயங்களிலும் தாமாக சக்தி கொண்டவர்கள் என்றோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியோ, உதவியோ அவசியற்றது என்றோ நம்பிக்கை கொண்டு விடக் கூடாது. இது, மன்னிக்க முடியாத பாவச் செயலான இணைவைத்தலுக்கு இழுத்துக் கொண்டு சேர்க்கும்.
மேலும், வஸீலா தேடுவதென்பது, இறை நேசர்களை வணங்கும் அடிப்படையில் அமைந்து விட்டால், அதுவும் இணைவைத்தலாகி விடும். இறைநேசர்களாயினும் அவர்களும் அல்லாஹ்வின் அடியார்களாகவும், அவனது உதவியின்றி எவ்வித காரியமாற்றுவதற்கும் சக்தியற்றவர்களாகவுமே இருக்கி ன்றார்கள் என்பது மறுக்க முடியாத அம்சமாகும்.
''(நபியே!) கூறுவீராக! அல்லாஹ் நாடினாலே தவிர, எனக்கு நானே நன்மை-தீமையைத் தடுத்துக் கொள்வதற்கும் சக்தி பெறமாட்டேன். (07:188)
எல்லா மத்ஹபைச் சேர்ந்தவர்களிடத்திலும் வஸீலா தேடும் விசயத்தில் சார்பாகவும் முரணாகவும் அதி தீவிரப் போக்கைக் கடைப்பிடிப்போர் உள்ளனர். இவர்களுக்கு இதன் உண்மை தெளிவுபடுத்தப் பட்டு வழிகாட்டப்படுவது அவசியமாகும்.