நபிமார்களின் ஷபாஅத் Prophet's Shafa'at
நபிமார்கள் அனைவரும் குறிப்பாக பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், மறுமை நாளில் பாவிகளில் சிலருக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். ஆனால், இதுவும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடைபெறும் என்பது கவனிக்கத் தக்கது. அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
''அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்ற பின்பே தவிர எந்தவொரு சிபாரிசு செய்பவருமில்லை.' (10:03)
''அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுவோர் யார்?|(02: 255)
அதேவேளை, சில அல்குர்ஆன் வசனங்கள், சிபாரிசு செய்வதென்று ஒன்று இல்லை என்ற கருத்தைச் சொல்வதாக பொதுவாகத் தோன்றலாம்.
''எவ்விதமான பரிமாற்றமும் நட்பும் பரிந்துரையும் இல்லாத நாள் வருமுன்......|(02: 254)
இங்கு குறிப்பிடப்படும் (ஷபாஅத்) பரிந்துரை என்பது அல்லாஹ்வின் அனுமதி இல்லாது, சுயவிருப்பின் பேரில் செய்யப்படும் பரிந்துரையைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது, தகுதியற்றோர் பரிந்துரை செய்வதைக் குறிக்கலாம். நபிமார்களோ, சுயவிருப்பின் பேரிலல்லாமல், அல்லாஹ்வின் அனுமதி யுடனேயே பரிந்துரை செய்வதும் அவர்கள் பரிந்துரை செய்வதற்கு முழுத் தகுதியும் உள்ளவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பரிந்துரையானது, மனிதர்களிடையே ஒழுக்கம், தூய்மை, இறையச்சம் போன்ற பண்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் ஆன்மீக உரமூட்டல்களை மேற்கொள்வதற்கும் பாவிகளை நல்வழிப் படுத்தவும் நல்வழியில் தூண்டவும் சிறந்த காரணியாக அமைந்துள்ளது. அதேவேளை, ஷபாஅத் என்பதும் வரையறைகளற்ற எளிய விடயமல்ல.
மேலும், ஷபாஅத் செய்யப்படுவோர் பாவிகளாக இருப்பினும், அவர்களது பாவச்செயல், சிபாரிசு செய்யக் கூடியவர்களுடன் இருக்கும் தொடர்பை முற்றாகத் துண்டிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. இதனால் தான், பாவிகள் தமக்குரிய அனைத்து ஷபாஅத்துக்கான படிகளையும் தகர்த்து விட வேண்டாமெனவும், அவற்றை முடிந்தவரை பேணிக் கொள்ளுமாறும் இஸ்லாம் எச்சரித்து வலியுறுத்து கின்றது.