CHENNAI SHIA YOUTH ASSOCIATION
  • Home
  • Places
    • Thousand Lights
    • Royapettah
    • Triplicane
    • Perambur
    • Pallavaram
    • Pudupet
    • Parrys
    • Hussainabad
    • Others
  • Gallery
  • About us
  • Tamil Shia
    • Tamil Shia Bayaan
    • தவ்ஹீத்
    • வஸீலா
    • நபிமார்களின் ஷபாஅத்
    • அஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்
    • இமாமத்
    • ஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்Ī
    • அஹ்லுல் பைத்தினரின் சிறப்பும்,அவர்களைப்
    • தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்
    • மண்ணில் சுஜூது செய்தல்
    • முத்ஆ திருமணம்
  • Extras
    • Daily Events Record
    • CSY Media
    • Shia Calendar
    • Muharram in Tamil Nadu
    • List of Shia Organisations in Tamil Nadu >
      • Markaz e Faiz e Islam
      • Husainy Trust
      • Anjuman e Hussainy
      • Tamil Nadu Shia Convention
    • Chennai Shia Youth Videos
    • Jobs
    • News
    • Nikah
    • Shia Leaders
    • Ayatullah Khamenei
    • Ayatullah Sistani
    • Ayatullah M Shirazi
  • Articles
    • Who is a Shia >
      • English
      • Tamil
    • 12 Imams பணிரண்டு இமாம்கள்
    • Event of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய
    • Imam Khomeini (ra) >
      • English
      • Tamil
    • Short Stories
    • Jannatul Baqi
    • Islam and Politics
    • History of Indian Shias
    • Islamic Etiquettes
    • Taqdeer or Destiny
    • 54 Islamic Countries
    • Muslim Unity
  • More
    • Social Welfare
    • Videos Social Welfare
    • Tamil Shia Images
    • Mass Marriage Application Forms
    • Charts
    • Manqabat
    • Duas
    • Ziaraats
    • Nauhas >
      • Ali Safdar
      • Nadeem Sarwar
      • Irfan Hyder
    • Learn Arabic
  • Sitemap
  • Contact Us
    • Contact Us
Tamil Shia Home Click Here தமிழ் ஷீஆ

Tawheed தவ்ஹீத்: இஸ்லாத்தின் ஜீவநாடி

தவ்ஹீத் எனும் ஏகத்துவம் பற்றிய அறிவு, அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் விடயத்தில் மிக முக்கிய மான அம்சமாகும். தவ்ஹீத், மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்று எனக் கருதுவதை விட அதுவே அனைத்து மார்க்கக் கோட்பாடுகளினதும் மூல உயிராக இருக்கின்றது என்றால் மிகையாகாது.

இஸ்லாமிய அடிப்படைகளும் அதனையொட்டிய பிரிவுகளும் தவ்ஹீதிலிருந்து தான் தோற்றம் பெறுகின்றன. அல்லாஹ் ஒருவன், நபிமார்களின் அழைப்பு (தஃவா) ஒன்று, இறைமார்க்கம் ஒன்று, கிப்லா ஒன்று, இறைவேதம் ஒன்று, அனைத்து மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் ஒன்று, முஸ்லிம்களின் அணி ஒன்று, இறுதியில் மீளும்; மறுமை நாளும் ஒன்றே என இந்த ஒருமை எங்கும் விரவிக் காணப்படுகின்றது.

இதனாலேயே, ஏகத்துவத்திலிருந்து ஷிர்க்கை நோக்கிச் செல்வதை மன்னிக்க முடியாத பாவமென இஸ்லாம் கருதுகின்றது.

''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ, அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார்.|| (04:48)

''நீர் இணை வைத்தால், நிச்சயமாக உமது செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக, நீர் நஷ்ட வாளிகளில் ஆகிவிடுவீரென உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வஹீ மூலம் அறிவிக்கப ;பட்டது.|| (39: 65)

ஏகத்துவத்தின் வகைகள்எமது நம்பிக்கைகளின் பிரகாரம், ஏகத்துவம், பல கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் பின்வருவன  முக்கியமானவையாகும்.

1.தவ்ஹீத் தாத்

இறைவன் தனித்தவன். அவனுக்கு இணையாகவோ, நிகராகவோ எதுவும் கிடையாத மூலவன் என்று நம்பிக்கை கொள்வது.

2.தவ்ஹீத் சிபாத் (பண்புகள்)

அறிவு, சக்தி, வல்லமை, நிரந்தரம் முதலிய பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வினது தாத் எனப்படும் மூலவியல்பில் உள்ளவையாகும். மேலும் அவனது பண்புகள் படைப்பினங் களின் பண்புகளைப்; போன்று காணப்படுவதில்லை. ஏனெனில், படைப்பினங்களுடைய பண்புகள் ஒவ்வொன்றும் அவற்றின் அடிப்படை மூலத்தில் இருந்து வேறுபட்ட இயல்பும் பல்லினத்; தன்மையும் கொண்டவையாகும். அல்லாஹ்வின் பண்புகள் அவனது தாத்தில் உள்ளவை என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்ந்த சிந்தனை தேவைப்படுகின்றது.

3.தவ்ஹீத் அஃப்ஆல் (செயல்கள்)

அல்லாஹ்வின் நாட்டத்திலிருந்தே உலகின் ஒவ்வொரு அசைவும், செயலும் உருவாகின்றது.

''அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன். அவனே ஒவ்வொரு பொருளின் மீது பொறுப்பாளன்.(39: 62)

''வானங்கள் மற்றும் பூமியினது (பொக்கி'ங்களின்) சாவிகள் அவனுக்கே உரியவையாகும்.|(42: 12)

எனவே தான், ''அல்லாஹ்வைத் தவிர, பிரபஞ்ச வெளிப்பாடுகளில் தாக்கமேற்படுத்தும் எந்தவொரு காரணியும் கிடையாது||என்று கூறப்படுகின்றது. இதனை வைத்து, மனிதர்கள் தமது செயற்பாடுகளில் சுதந்திரமற்றவர்கள் என்று பொருள் கொள்ளப்படக் கூடாது. மாறாக, மனிதர்கள் தாமாகவே தீர்மானித்து செயற்படுவதில் சுதந்திரமானவர்களாக இருக்கின்றனர்.

''நிச்சயமாக, நாம் மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டியுள்ளோம். அதைப் பின்பற்றி அவன் ஒன்று- நன்றியுள்ளவனாக இருக்கலாம். அல்லது அதைப் பின்பற்றாது நன்றி மறந்தவனாக இருக்கலாம்.' (76: 03)

''மனிதனுக்கு அவனாகவே முயற்சி செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை.|(53: 39)

இவ்வசனங்கள் மனிதன் சுதந்திரமான நாட்டமுடையவன் என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், குறித்த செயலை செய்வதற்கான சக்தியையும் சுதந்திர நாட்டத்தையும் அல்லாஹ்வே மனிதர்களுக்கு வழங்குகின்றான். அந்த விதத்தில் மனிதர்கள் அல்லாஹ்வோடு தொடர்பு படுகின்ற போதிலும், மனிதர்களது செயல்கள் பற்றிய அவர்களது பொறுப்பு அதன் மூலம் குறைந்து விடுவதில்லை.

உண்மையில் மனிதர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அல்லாஹ் நாடியுள்ளான். அதன் மூலம், அவன் மனிதர்களைப் பரிசோதிக்கின்றான். அத்துடன் பரிபூரணத்துக்கும் இட்டுச் செல்கின்றான்.  ஏனெனில் தீர்மானிக்கும் சுதந்திரம் மற்றும் அல்லாஹ்வை அடிபணிவதற்கு சுயவிருப்பத்தின் படி முன்வருதல் என்பவற்றின் மூலமே மனிதர்களது பரிபூரணத் தன்மை ஊற்றெடுக்கின்றது. ஏனெனில், சுதந்திரமற்ற நிலையில் விதிக்கப்பட்ட செயல்கள், மனிதர்களுடைய நல்ல அல்லது கெட்ட பண்புகளை பிரதிபலிப்பனவாக இருக்க முடியாது.

மனிதர்கள் தமது செயல்களில் சுதந்திர மற்றவர்களாகக் காணப்படுவார் களாயின், நபிமார்களின் வருகைக்கோ இறைவேதங்கள், மார்க்க அழைப்புகள், அதன் வழிகாட்டல்கள் என்பவற்றுக்கோ எவ்வித அர்த்தமும் இருந்திருக்காது. அதேபோல நன்மை, தீமைகளுக்கு அல்லாஹ்வே கூலி வழங்குவதும் கூட அர்த்தமற்றதாகவே அமைந்திருக்கும்.

இதே விடயங்களைத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுடைய அஹ்லுல் பைத்தினரிலிருந்து தோன்றிய பரிசுத்த இமாம்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள முடிகின்றது. அவர்களது கூற்றின் பிரகாரம்:

''முழுக்க விதியை நம்புவதோ, அல்லது பரிபூரண சுதந்திரமோ சரியானதன்று. உண்மை, அவ்விரண்டுக்கும் மத்திமமானதாகும்.||

4.தவ்ஹீத் இபாதத் (வணக்க வழிபாடுகளில் தவ்ஹீத்)

இபாதத் எனப்படும் வணக்க வழிபாடு அல்லாஹ்வுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டியதாகும். அவனைத் தவிர, வணங்கி வழிபடத் தகுதியான நாயன் யாருமில்லை. இது, ஏகத்துவத்தின் அதி முக்கிய அம்சமாகும். நபிமார்களும் விசேடமாக இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.

''அவர்கள் இறைவனை மாத்திரமே வணங்க வேண்டும், அவனுக்காக மார்க்கத்தை தூய்மைப்படுத்த வேண்டும், இணை வைப்பதிலிருந்து ஏகத்துவத்தின் பால் திரும்ப வேண்டும், தொழுகைகையும் கடைப் பிடித்து ஸக்காத்தும் கொடுத்து வர வேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் ஏவப்பட வில்லை. இன்னும் இது தான் நேரான மார்க்கமாகும்.||(98: 05)

ஆத்ம ஞானம் (இர்பான்), ஒழுக்கவியல் (அக்லாக்) போன்ற துறைகளில் உச்சநிலை அடைவதற்கான படிகளைத் தாண்டுவதற்கு, கண்டிப்பாக தவ்ஹீத் மிக ஆழமாகப் பேணப் படல் வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறெதனையும் அன்பு கொள்ளாத, எல்லா இடங்களிலும் அவனை மட்டுமே வேண்டுகின்ற, அவனைத் தவிர வேறெதனைப் பற்றியும் சிந்திக்காத, அல்லாஹ்வுக்காகவன்றி வேறெதற்காகவும் செயற் படாத தன்மை ஆகியன இதில் அடங்கும். இதனைத்தான்: ''உன்னை ஈர்த்தெடுக்கும் அல்லாஹ் அல்லாத எதுவும் நீ வணங்கும் சிலையாகக் கருதப்படுகின்றது|| என்று கூறுவதுண்டு.

நமது நம்பிக்கையின் படி, தவ்ஹீத் என்பது, இந்நான்கு கிளைகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. பின்வருவனவும் அதில் அடங்குகின்றன.

5.தவ்ஹீத் மாலிகிய்யத்

அதாவது எல்லா சிருஷ்டிகளும் அல்லாஹ் வுக்குச் சொந்தமானவை என்று நம்புவது.

''வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியவையாகும்.(02:284)

6.தவ்ஹீத் ஹாகிமிய்யத்

அதாவது சட்டவாக்க அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியதாகும் என்பது.

''மேலும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ, அத்தகை யோர் தாம் காபிர்கள்.' (05: 44)


Powered by Create your own unique website with customizable templates.
  • Home
  • Places
    • Thousand Lights
    • Royapettah
    • Triplicane
    • Perambur
    • Pallavaram
    • Pudupet
    • Parrys
    • Hussainabad
    • Others
  • Gallery
  • About us
  • Tamil Shia
    • Tamil Shia Bayaan
    • தவ்ஹீத்
    • வஸீலா
    • நபிமார்களின் ஷபாஅத்
    • அஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்
    • இமாமத்
    • ஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்Ī
    • அஹ்லுல் பைத்தினரின் சிறப்பும்,அவர்களைப்
    • தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்
    • மண்ணில் சுஜூது செய்தல்
    • முத்ஆ திருமணம்
  • Extras
    • Daily Events Record
    • CSY Media
    • Shia Calendar
    • Muharram in Tamil Nadu
    • List of Shia Organisations in Tamil Nadu >
      • Markaz e Faiz e Islam
      • Husainy Trust
      • Anjuman e Hussainy
      • Tamil Nadu Shia Convention
    • Chennai Shia Youth Videos
    • Jobs
    • News
    • Nikah
    • Shia Leaders
    • Ayatullah Khamenei
    • Ayatullah Sistani
    • Ayatullah M Shirazi
  • Articles
    • Who is a Shia >
      • English
      • Tamil
    • 12 Imams பணிரண்டு இமாம்கள்
    • Event of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய
    • Imam Khomeini (ra) >
      • English
      • Tamil
    • Short Stories
    • Jannatul Baqi
    • Islam and Politics
    • History of Indian Shias
    • Islamic Etiquettes
    • Taqdeer or Destiny
    • 54 Islamic Countries
    • Muslim Unity
  • More
    • Social Welfare
    • Videos Social Welfare
    • Tamil Shia Images
    • Mass Marriage Application Forms
    • Charts
    • Manqabat
    • Duas
    • Ziaraats
    • Nauhas >
      • Ali Safdar
      • Nadeem Sarwar
      • Irfan Hyder
    • Learn Arabic
  • Sitemap
  • Contact Us
    • Contact Us