ஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவனா தோற்றுவித்தான்?
Did Abdullah Ibn Saba originated Shi'a?
பதில்: ஷீஆ கோட்பாட்டையும் அதன் தோற்றத்தையும் அறிவதற்கு, முதலில் அதன் சொல் மற்றும் நடை முறைக்கருத்தை அறிய வேண்டும். அகராதியில் ஷீஆ என்பதற்கு பின்பற்றுபவர் என்பதும் நடை முறைப் புலக்கத்தில் ஹஸரத் அலீ (அலை) அவர்களையும் அஹ்லுல் பைத்துக்களையும் பின்பற்றுபவர்கள் என்பதேயாகும். (இப்னு மன்சூர், லிஸானுல் அரப், பாகம் 7,பக் 258) அல்குர்ஆனிலும் ஷீஆ என்ற சொல் அகராதியின் கருத்திலேயேவந்துள்ளது. இப்னு கல்தூன் தனது முகத்திமா என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஷீஆ அகராதியில் பின்பற்றுபவர், நேசம் வைப்பவர் ஆகும். நடைமுறை வழக்கத்தில் ஹஸரத் அலீ (அலை) அவர்களையும் அன்னாரது பிள்ளைகளையும் பின்பற்றுபவர்களுக்கு உபயோகிக்கப்படும். ஷீஆக்களின் கொள்கை முஸ்லிம்களின் அடிப்படை மூலாதாரங்களில் அதாவதுஅல்குர்ஆனிலும் நாயகத்தின் சுன்னாலிலும் இருந்து பெறப்பட்டவையே. மாறாக அவர்களுக்கென தனிப்பட்ட கொள்கை இல்லை ஆனால் ஷீஆக்களுக்கு சுன்னாக்களுக்கும் இடையில் தனியே கிலாபத் விடயத்தில் அது நஸ்ஸீ அல்லது நஸ்ஸு இல்லை என்பதில் தான் கருத்து வேறு பாடுஇருக்கின்றது. இவ்விடயத்தில இரு தரப்பினரும் அதிகமாக ஹதீதுகளை அறிவித்துள்ளனர் இதில் சில முதவாத்திராகும். (அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும்.) அதையே ஆதாரமாக முன்வைக்கின்றர். அதில் ஹதீது கதீர், ஹதீது மன்ஸிலத், ஹதீது யவ்மித்தார் போன்றவையாகும். மற்ற அடிப்படை மத்ஹபு விடயங்களில் அஹ்லுஸ் சுன்னாக்களுடன் ஒருமித்தகருத்தையே கொண்டுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு மாற்றமான கருத்தையே சொல்கின்றனர்.
ஷீஆ என்பது ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலே அவர்களது மூலமாக சொல்லப்பட்டது. அதில்சிலவற்றைத் தருகின்றோம்: றோம்:
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு சாலிஹான நல்லமல்கள் செய்கின்றார்களோ அவர்கள் தாம் படைப்புக்களில் மிக மேலானவர்கள். 98-7
என்ற வனம் இறங்கிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அலீயைப் பார்த்து சொன்னார்கள்: சிறந்த சிருஷ்டி நீயும் உமது ஷீஆக்களுமேயாகும். மறுமையில் நீரும் உமது ஷீஆக்களும் இறைவன் உங்களோடு திருப்தியுற்ற நிலையிலும், நீங்கள் இறைவனில் திருப்தியுற்ற நிலையிலும் வருவீர்கள் என்றார்கள். (ஹாகிம் ஹிஸ்கானி, ஷவாஹிதுத் தன்ஷீல் பாகம் 2 பக்கம் 357 ஹதீது இலக்கம் 1126)
ஜலாலுத்தீன் சுயூத்தி என்பவர் துர்ருல் மன்தூர் என்ற தனது குர்ஆன் விரிவுரை நூலில் மேற்கூறிய வசனத்தின் கீழ் குறிப்பிடுகிறார்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஹஸரத் அலீயைப் பார்த்து நீயும் உமது ஷீஆக்களும் வெற்றியாளர்கள் என கூறினார்கள். (சுயூத்தி, துர்ருல் மன்தூர் பாகம் 6 பக்கம் 379)
இதன்படி ஷீஆக் கொள்கை இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய பிரிவு, மத்ஹபு இல்லை மாறாக அதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களே ஏற்படுத்தி, ஆரம்பித்து அதன் தலைமைத்துவத்தை ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒப்படைத்தார்கள் என்பது தெட்டத்தெளிவாகின்றது. இதை முதலில் பெரும் நபித்தோழர்களில் அபூதர் கிப்பாரி,சல்மான் பாரிஸி, மிக்தாத், அம்மார் போன்றவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். (சுயூத்தி, துர்ருல் மன்தூர் பாகம் 6 பக்கம் 379) இவ்வாறு இருக்கையில் சிலர் இந்த கொள்கைக்கு உண்மையில் இஸ்லாத்திற்கு கெட்ட பெயர் உண்டாக்க விரும்பி அதை ஒரு யஹுதிக்கு, அவனது தோற்றத்தில் ஷீஆ இன்னும் சுன்னா அறிஞர்களுக்கு மத்தியில் சந்தேகம் இருக்கும் நிலையில் அவனைஅதனுடன் சம்பந்தப்படுத்திக் கூறுகின்றனர். இதில் எதிர்ப்பு மற்றும் புரக்கணிப்பைத் தவிர வேறு உண்மையான வராலற்று ஆதாரம் ஏதுமில்லை. மறுபுறம் ஷீஆக்கள் அவர்களது எந்த கொள்கைளையும் அவனிடமிருந்து பெறாத நிலையில் மாறாக அவனுக்கு எதிராக அவனை வழி கெட்டவன் என்று கருதும் நிலையில் எவ்வாறு அவனுடன் சம்பந்தப்படுத்திக் கூறமுடியும். இன்னும் ஷீஆக்களின் ஏற்றுக் கொள்ளப்படும் நூற்களில் ஏற்றுக் கொள்ளப்படாத எந்த நூற்களிலும் அவனை புகழ்ந்து எவ்வித வசனமும் இல்லை. ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து வந்திருக்கும் சில அறிவிப்புக்களில் இமாம் அவனை முர்தத் என்றும் கொலை செய்ய வேண்டும் என திர்ப்பு வழங்கியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். (அல்லாமா முர்தழா அஸ்கரி, அப்துல்லாஹ் இப்னு ஸபா வ அஸாதீரு உஹ்ரா, பாகம் 2 பக்கம் 174) மேலும் சொல்லியுள்ளார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஸபா யமனைச் சேர்ந்த யஹுதியாகும். மூன்றாம் கலீபாவின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றான் பல இடங்களில் (பஸரா, ஷாம், கூபா) முஸ்லிம்களை ஏமாற்றி மக்களுக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் திரும்பவருவார்கள் என நன்மாராயம் சொன்னான். இன்னும் ஹஸரத் அலீயை நாயகத்தின் வசி என்றும் மூன்றாம் கலீபா, ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களது உரிமையை அபகரித்துள்ளார் கருதினான். நபித்தோழல்களில் சிலரும் அவனை ஏற்று அவன் பக்கம் வந்தனர். இதனால் பெரும் படையை ஏற்பாடு செய்து கலீபாவை கொலை செய்வதற்கு தூண்டி விட்டான். (இப்னு அதீர், தாரீகு இப்னு அதீர், பாகம் 3 பக்கங்கள் 95, 96, 103) இச்சம்பவம் பொய் என்பது தெட்டத் தெளிவாகும். ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது பாடசாலையில் பயின்ற சஹாபாக்கள் நவ முஸ்லிமான, புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவனுடைய கருத்துக்களால் எவ்வாறு தாக்கத்திற்குள்ளாகி இருக்க முடியும்? இன்னும் எவ்வாறு இஸ்லாமிய ஆட்சியில் அதற்கு தெரியாது சுதந்திரமாக பெரும் படையைத் திரட்டி அதை அவ்வரசுக்கு எதிராக கிளரச்சி செய்ய தூண்ட முடியும்? ஆனால் சில நபித்தோழர்கள் வெறுமனே அரசை விமர்சித்த காரணத்துக்காக மட்டும் அவர்களை நாடு கடத்திய அரசு இதைஎவ்வாறு விட்டு வைத்திருக்க முடியும்? இன்னும் கிரந்தங்களில் கூட இது பற்றி எதுவும் கூறவில்லை. எகிப்தின் பிரபல்யம் பெற்ற எழுத்தாளர் தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: யஹுதியான அப்துல்லாஹ் இப்னு ஸபா இருந்திருந்தாலும் கூட நாம் ஷீஆ வரலாற்றின் முக்கியமாக கட்டங்களில் அவனது எவ்வகையான தாக்கத்தை மற்றும் சதித்திட்டத்தை அதில் காணவில்லை. (தாஹா ஹுஸைன், அல்பித்னதுல் குப்ரா, பாகம் 1 பக்கம் 760) அத்தோடு அஹ்லுஸ் சுன்னா அறிஞர்களில் ஒருவரான முஹம்மத் குர்த் அலி என்பவர் இவ்வாறு சொல்கிறார்: ஷீஆ என்ற பெயரில் ஒரு மத்ஹபின் தோற்றத்திற்கு அப்துல்லாஹ் இப்னு ஸபா தான் காரணம் என்ற கருத்து மர்தூத்தான (நிராகரிக்கபடக் கூடிய) கருத்து அபிப்பிராயமாகும். (முஹம்மத் ஹுஸைன் முளப்பர், தாரீகுஷ் ஷீஆ) அப்துல்லாஹ் இப்னு ஸபாவுடைய சம்பவத்தை முதல் தடவையாக இப்னு அதீர் (மரணம் ஹிஜ்ரி 630) என்பவரேஎவ்வித ஸனதும் இல்லாது தனது வரலாற்று நூலில் கொண்டு வந்தார். அவரது வரலாற்று கிரந்தத்தின் முக்கிய உசாத்துணை நூல் தபரியாக இருப்பினும் தபரி அதை ஸைப் இப்னு உமர் என்பவறிடம் இருந்து அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஸைப் வரலாற்றில் பொய் சம்பவங்களை உருவாக்குதில் ஷீஆ இன்னும் சுன்னா ரிஜால் அறிஞர்களிடத்தில்சந்தேகத்திற்கு இடமில்லை. (அல்லாமா முர்தழா அஸ்கரி, அப்துல்லாஹ் இப்னு ஸபா வ அஸாதீரு உஹ்ரா, பாகம் 2 பக்கம் 40)
மேலும் அஹ்லுஸ் சுன்னாக்கள் சஹாபாக்கள் அனைவரையும் நீதமானவர்கள் என்றும் அவர்களை ஷைத்தானுடைய சிந்தனைகளைப் பின்பற்றுவதை விட்டும் தூரமாக்கின்றனர். இந்நிலையில் எவ்வாறு அவர்கள் ஒரு யஹுதியை தனது தலைவனாக, வழி காட்டியாக எடுத்து மூன்றாம்கலீபாவுக்கும் முஸ்லிம்களின் நலனுக்கு எதிராகவும் கிளர்ச்சி செய்திருக்க முடியும்?
ஷீஆக் கொள்கை சகல துரைகளிலும், விடயங்களிலும் அல்குர்ஆன் மற்றும் நாயகத்தின் குடும்பத்தின் மூலமாக அறிவிக்கப் பட்டிருக்கும் நபிகளாரின் சுன்னவில் இருந்து பெறப்பட்ட விடயங்களைக் கொண்டு ஸ்தீரமாக இருக்கும் ஒரு கொள்கையாகும். தூன் ஏற்றுக் கொள்ளும் சகல விடயங்களிலும் தெளிவான ஆதாரங்கள் கொண்டுள்ளது. எனவே ஒளிமயமான இஸ்லாமியசட்டதிட்டங்களை அது அல்லாத இடத்திருந்து பெற வேண்டும் என்ற தேவையே அதற்கு இல்லை. அஹ்லுல் பைத் அல்லாதவர்களுக்கு இதை சம்பந்தப்படுத்தி கூறுவது அதற்கு கெட்ட பெயரை எடுத்துக் கொடுப்பதற்காகவே அன்றி வேறு எந்த உண்மையும் அதில் இல்லை.
அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவன் பற்றிய மேலதிய விபரத்திற்கு கட்டுரைப் பகுதியில் அப்துல்லாஹ் இப்னு ஸபா ஓர் கற்பனை மனிதன் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

ஷீயாவைத் தோற்றுவத்தவன் அப்துல்லாஹ் இப்னு ஸபா எனும் யூதனா?
Did Shias Originated from so called Jewish Abdullaah ibn Saba?
ஷீஆவைத் தோற்றுவித்தவர் நபி (ஸல்) அவர்களே என்பது ஷீஆ நம்பிக்கையாகும். இது சம்பந்தமான நபிமொழியை மேலே நாம் குறிப்பிட்டிருக்கிறோம். எனினும் ஷீஆக்களின் தோற்றத்தை,அப்தில்லாஹ்பின் ஸபா எனும் யூதனுடன் தொடர்புபடுத்தி கதையளத்தல், இஸ்லாத்தின் எதிரிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒன்றாகும். அப்தில்லாஹ் பின் சபா என்பவனின் கதை, ஒரு கற்பனையானது என்பதை ஷீஆ, சுன்னி வரலாற்றாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். , ஷீஆ அறிஞர் அல்லாமா அஸ்கரீ எனும் வரலாற்றாய்வாளர் 'அப்தில்லாஹ் பின் சபா' எனும் தலைப்பில் இரு பாகங்களைக் கொண்ட ஆய்வுநூலொன்றை எழுதி, அப்தில்லாஹ் பின் சபா ஒரு கற்பனை மனிதன் என்றும், அதில் எவ்வித உண்மையுமில்லை என்றும் பலமான ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். இவரின் கருத்தையும், நூலையும் மறுத்து இதுவரை எம்மறுப்பு நூலும் எழுதப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்தில்லாஹ் பின் சபாவின் கதையை சில வரலாற்றாசிரியர்கள் அறிவித்துள்ள போதிலும், அவர்கள் அனைவரும் அதை தாரீகுத்தபரி எனும் வரலாற்றேடிலிருந்தே பதிவு செய்துள்ளனர். இமாம் தபரி அவர்களோ அப்தில்லாஹ் பின் சபாவின் கதையை செய்ப் பின் அம்ர் தமீமீ கூபீ எனும் ராவியிடமிருந்து அறிவிக்கிறார். இல்முர்ரிஜால் எனும் ராவிகளைப்பற்றிய ஆய்வுத்துறையில் பரிச்சயமுள்ள அறிஞர்கள், 'செய்ப் பின் அம்ர் தமீமீ கூபீ' என்பவர் கதீதுகளை இட்டுக்கட்டிப் புனைபவர், பொய்யர், பலயீனமானவர்,நம்பத்தகாதவர் என்றெல்லாம் சாடியுள்ளனர். இதனால் இவரின் பலயீனமான அறிவிப்பை எவ்வகையிலும் நம்ப முடியாது. என அல்லாமா அஸ்கரி சுட்டிக்காட்டுகிறார்.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக
அப்துல்லாஹ் பின் சபாவின் கற்பனைக்கதையை கொக்கரிப்போர், அக்கதையின் பாரதூரத்தை விளங்கிக் கொள்ளாமலே உள்ளனர். மூன்றாம் கலீபாவின் காலத்தில் அப்துல்லாஹ் பின் சபா எனும் யூதன் முஸ்லிம் உம்மத்தைக் குளப்பித்துண்டாடியதுடன், அவர்களுக் கெதிராகக் கிளர்ச்சி செய்த குழுக்களுக்கு பின்னணியிலிருந்து செயற்பட்டான்; என்பன போன்ற கருத்துக்களைக் கூறுகின்றனர். இஸ்லாமிய வரலாற்றுத்துறை அறிஞர்கள் எவரும் இக்கட்டுக் கதையை நம்புவதில்லை. அதேபோன்று அத்துறையில் ஆர்வமுடைய எவரும் இப்படியான போலிக் கருத்துக்களுக்கு இடமளிப்பதில்லை. ஏனெனில்
01.குர்ஆனின் வாசிப்புமுறை போன்ற மிகச் சிறிய பிரச்சினைகளைக் கூட, மிகப்பாரதூரமாகக் கருதி அதற்கெதிரான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்ட மூன்றாம் கலீபா அவர்கள் முழுமுஸ்லிம் உம்மத்தையும் குழப்பியடித்து சிதறவைக்குமளவுக்குச் செயற்பட்ட ஒரு யூதனின் அடாவடித்தனங்களைக் கண்ணுற்று நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்திருப்பார்களா? என்ற ஐயம் தோன்றுகின்றதல்லவா?
02.பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்கள் இன்னும் உயிருடனிருந்த அக்காலப்பகுதியில் ஒரு யூதன், பல உயிர்த்தியாகங்களுக்கு மத்தியில் உருவான இஸ்லாத்தையும் அதன் நம்பிக்கைகளையும் தகர்த்;திடுமளவுக்கு பார்த்துக் கொண்டு மௌனமாகவா இருந்தார்கள்? என்றகேள்வி அவர்களை அவமதிப்பதாக அமையுமல்லவா?
03.இஸ்லாமிய வரலாற்றின் இடைநடுவே அல்லது ஆங்காங்கு யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சம்பந்தப்படுத்தி இஸ்லாத்தை மாசுபடுத்த தொன்று தொட்டு இன்று வரை பல சதிகள் நடைபெற்று வருகின்றன. அப்துல்லாஹ் பின் சபா எனும் யூதன் இஸ்லாத்தின் நம்பிக்கைகளை மாற்றியமைத்தான் எனக் கூறி இஸ்லாத்தின் போதனைகளில் யூதகிறிஸ்தவக் கையாடல்களும், ஊடுருவல்களும் ஊன்றியுள்ளது போன்று கதையளப்பது, இஸ்லாத்தின் தூமையை மாசுபடுத்துவதாக அமையாதா?
எனவே மேற்குறித்தவைகளுடன் ஒப்பிடும்போது, அப்துல்லாஹ் பின் ஸபாவின் கற்பனைக் கதையை ஒரு புனையப்பட்ட, இட்டுக்கட்டப்பட்ட கதையாகவே ஷீஆக்கள் கருதுகின்றனர்.

அப்துல்லாஹ் இப்னு ஸபா ஓர் கற்பனை மனிதன்.
Abdullah ibn Saba is an Imaginary Person
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்று ஆசிரியர்களில் சிலர் அப்துல்லாஹ் இப்னு ஸபா பற்றியும் ஸபஈன்கள் பற்றியும் இன்னோரன்ன விடயங்களையெல்லாம் கூறி வந்துள்ளனர். இப்னு ஸபா பற்றிய உண்மை விளக்கத்தை அறிந்து கொள்ளவே இவ் ஆய்வுரை முன்வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு சமூகத்தை இப்ன ஸபாவோடு தொடர்பு படுத்த முனையும் விடயத்தின் உண்மையை தெளிவாக விளங்க ஏதுவாக அமையும் என நினைக்கின்றோம். எனவே இப்ன ஸபா பற்றிய விடயத்தை சுருக்கமாகவும் அதனையடுத்து இது பற்றிய உண்மை நிலையை தெளிவு படுத்தவும் விரும்புகின்றோம்.
அப்துல்லாஹ் இப்னு ஸபா பற்றி வரலாற்று ஆசிரியர்கள் கூறும் கூற்று இதுதான்:
எமன் நாட்டில் சன்ஆஃ எனும் பிரதேசத்தில் பிறந்து யூத மதத்தை பின் பற்றி வாழ்ந்த ஒருவன் தான் இப்னு ஸபா. முஸ்லிம் சமுகத்தைப் பிரித்து பிளவு படுத்த தன்னால் முடிந்த சகல சதித்திட்டங்களையும் மேற்கொண்டான். இதற்காக அவன் யதார்த்தத்தில் யூதனாக இருந்தாலும் தன்னை ஒரு முஸ்லிமாக மற்றோருக்கு காட்ட முனைந்தான். ஷாம், பஸரா, கூபா, ஈராக், எகிப்து போன்ற நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டு அங்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி அவர்களுக்கு மத்தியில் தவரான கருத்துக்களைப் பரப்பலானான்.
அவன் கூறிய கருத்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் ஈஸா (அலை) அவர்களைப் போன்று இவ்வுலகிற்கு மீண்டும் வருவார்கள். முன்வாழ்ந்த நபிமார்கள் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு பிரதிநிதியை கலீபாவை வைத்திருந்தனர். முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும் ஒரு பிரதி நிதி இருந்தார். அவர்தான் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள். ஆனால் முஹம்மத் நபி (ஸல் )அவர்களால் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கொடுக்கப் பட்;ட அந்த கலீபாப் பொறுப்பை உதுமான் பின் அப்பான் பறித்துக் கொண்டார். அலிக்கு சொந்தமான கிலாபத் பதவியை உதுமானிடமிருந்து மீட்டெடு த்து அலியிடம் ஒப்படைப்பது எமது கடமை. அதற்காக நாம் போராட வேண்டும். என்ற கருத்துக்களை யெல்லாம் உணர்வு பூர்வமாக மக்கள் மத்தியில் முன்வைத்தான்.
இவ்வாரான கருத்துக்களைச் சொல்லி குழப்பம் விளைவித்த இவனை வரலாற்று ஆசிரியர்கள் அப்துல் லாஹ் இப்னு ஸபா என பெயரிட்டு அவனை இப்னு அமதிஸ் ஸவ்தா ( கறுப்ப நிற அடிமைப் பெண்ணி ன் மகன்) என புனைப் பெயரும் சூட்டியுள்ளனர். அப்துல்லாஹ் இப்னு ஸபா தனது பிரதி நிதிகளை முஸ்லிம் நாடுக்ளுக்கு அனுப்பி நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் எனும்போர்வையில் அந்தந்த நாட்டு மனிதர்களையும் கவர்னர்களை யும் ஆட்சியிலிருந்து வீழ்த்திட முனைந்தான். இதன் பெறுபேராக முஸ்லிம்களில் அதிகமானவர்கள் அவனது மாய வலையில் அகப்பட்டு அவனது திட்டங்களை பின் தொடர்ந்தார்கள். அப்படி அவனது மாயவலையில் அகப்பட்டவர்களில் ஸஹாபாக்கள், தாபியீன்கள் போன்றோரும் காணப்படுகிறனர். உதாரணத்திற்கு அபூ தர்ருல் கெப்பாரி, அம்மார் பின் யாசீர், அப்துர் ரஹ்மான் பின் உதைஸ், மாலிக் அஸ்தர் போன்றோரைக் குறிப்பிடலாம் எனக் கூறுகின்றனர்.
இன்னும் ஸபஈன்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம் முஸ்லிம்களை தங்களது நாட்டு கலீபாக்களுக்கு எதிராக போராடும் படியாக வேண்டிக் கொண்டிருந்தார்கள். இவ்விடயங்களிலெல்லாம் தங்களது தலைவனாக இப்னு ஸபாவைப் பின்பற்றி பிரதேசங்களின் கவர்னர்களுக்கு எதிராக கடிதங்களை எழுதினார்கள். இதன் காரணமாக முஸ்லிம்களில் பலர் ஸபஈன்களின் பிரச்சாரத்திற்குட்பட்டு மதீனா நகரை நோக்கி விரைந்து அங்கு உதுமான் பின் அப்பான் அவர்களின் வீட்டை முற்றுகையிட்டார்கள். இம்முற்றுகை ஈற்றில் கலீபா உதுமானின் கொலைக்கு காரணமாகி விட்டது. இத்தனை காரியங்களுக்கும் ஸபஈன்களே காரணகர்த்தாக்கள் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறிவிடத் தவரவில்லை.
தொடர்ந்து கூறுகையில் அலிக்கு கிலாபத் பதவியைக் கொடுத்து பைஅத் (உடன்படிக்கை) செய்ததன் பின் தல்ஹா, சுபைர் போறோர் உதுமானின் கொலைக்குப் பழிக்குப்ட பழி வாங்க (ஜமல் யுத்தமெனும் ஒட்டக யுத்தத்திற்காக) பஜராவுக்கு வந்தார்கள். அலிக்கெதிராகபோர்கொடி தூக்கிய இவர்களுக்கும், அலி அவர்களுக்குமிடையில் இணக்கம் ஏற்பட்;ட ஆரம்பமானது.
இதை அறிந்த ஸபஈன்கள் இவ்விரு பிரிவினருக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டால் உதுமானின் கொலைக்கு சூத்திரதாதியாக இருந்த இவர்கள் மக்கள் மத்தியில் இனங்காணப்பட்டு விடுவார்கள் என்றஞ்சி அலிக்கும் எதிர் படையினருக்குமிடையில் ஏற்பட இருந்த இணக்கத்தை இரவோடு இரவாக குழப்பி விட முனைந்தார்கள். இதற்கான சதிகளை மேற்கொண்டு அலி (ரழி) அவர்களுக்கும் அவர்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியோருக்கு மிடையில் யுத்த நெருப்பை மூட்டி விட நினைத்த ஸபஈன்கள் தங்களது ஸஹாபாக்களை இரு பிரிவினராக பிரித்து இரு தரப்புப் படையிலும் ஊடுருவச் செய்தனர்.
இரகசியமாக ஊடுருவிய இவர்கள் இரவின் இரளைப்பயன் படுத்தி உரு பிரிவினர் மற்ற தன் எதிரிப்படையோடு யுத்தம் செய்யுமளவு தந்திரோபாயங்க ளைக் கையாண்டனர். ஊடுருவியவர்கள் மற்ற படையை நோக்கி அம்புகளை வீசினர். இதைக் கண்ட மற்ற பிரிவினரும் எதிர்த் தாக்குதலை ஆரம்பித் தனர். ஈற்றில் யுத்தம் சூடு பிடித்தது.
எனவே பஸராவில் நடைபெற்ற ஒட்டகை யுத்தம் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணிகளாக இருந்தவர்கள் ஸபஈன்களும்,அப்துல்லாஹ் இப்னு ஸபாவுமேயாகும். மாறாக ஹஸரத் அலியோ ஆயிஷா நாயகியோ காரணமல்ல என்கின்றார்கள்.
இப்னு ஸபா பற்றிக் கூறிய வரலாற்று ஆசிரியர்கள் இத்தோடு இதனை நிறுத்திக் கொண்டனர். அதன் பின் ஸபஈன்களின் நிலை என்ன ஆனது? என்று எவ்விதக் கருத்தையும் அவர்கள் தெரிவிக்க வில்லை. இது ஒரு புறமிருக்க ஸபஈன்களின் பட்டியலில் சில முக்கிய ஸஹாபாக்களும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஸபஈன்கள் என பழி சுமத்தப் பட்டவர்களில் பின் வரும் ஸஹாபாக்களும் அடங்குவர்.
1) அபூதர்ருல் கெப்பாரி (ரழி)
2) அம்மார் பின் யாசிர் (ரழி)
3) அப்துர் ரஹ்மான் பின் உதைஸ் (ரழி)
4) ஸஃஸஅது பின் சூஹான் (ரழி)
5) முஹம்மத் பின் ஹுதைபா (ரழி)
6) முஹம்மத் பின் அபூபக்கர் (ரழி)
7) மாலிக் அஷ்தர் (ரழி)
ஹஸ்ரத் அபூதருல் கெப்பாரி (ரழி)
இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட நான்கு பேரில் இவரும் ஒருவர். ஜாகிலிய்யாக் காலத்தில் கூட சிலை வணக்கத்தை வெறுத்தவர். இஸ்லாத்தை ஏற்ற அவர் புனித இஸ்லாம் மார்க்கத்தை கஃபாவில் பிரகடனப்படுத்தினார். இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்தவர்களில் சிலர் அபூதர்ரைப் பிடித்து சித்திரவதைக்குள்ளாக்கினர். மிக மோசமாக துன்புறுத்தினர். இரத்தம் வழிந்தோட அவர் மயக்கமுற்ற போது அபூதர் மரனித்து விட்டார் என்ரெண்ணிய குறைஷிகள் அவரை விட்டகன்றனர்.
அபூதர் மயக்கம் தெளிந்த பின் நபிகளாரிடம் வந்தார். உம்மை அழைக்கும் வரை உமது கோத்திரத்துடனேயே இருந்து கொள்ளுங்கள். என்ற நபிகளாரின் கட்டளைக்கேற்ப தமது வீட்டுக்குச் சென்றார்கள். பத்ர், உஹத் யுத்தம் நடந்து முடியும் வரை நபிகளாருடைய கட்டளைக்கிணங்க இவர்கள் தமது வீட்டிலேயே இருந்தார்கள்.
பின்னர் அவர்கள் நபிகளாவைச் சந்திக்க மதீனாவுக்கு வந்தார்கள். அங்கேயே தங்கினார்கள். நபிகளாருடைய சோக வபாத்திற்குப் பின் மூன்றாம் கலீபாவின் ஆட்சிக் காலத்தில் ஷாம் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டார்கள். ஷாம் பிரதேசத்தில் கலீபா முஅவியாவின் தீய நடவடிக்கைகளைக் கண்டு சகிக்க முடியாத அபூதர் (ரழி) அவர்கள் அவரைப் பற்றி பிரதேச மக்களிடம் முறையீடு செய்ய ஆரம்பித்தார். அபூதர்ரின் இச்செயலைக் கண்ணுற்ற கலீபா முஆவியா மூன்றாம் கலீபா உதுமான் அவர்களுக்கு தூது அனுப்பி அபூதர்ரை நாடு கடத்தும் ;படி வேண்டினார். கலீபா உதுமான் அவர்கள் அபூதர்ரை ரபதா என்ற பாலைவனத்துக்கு நாடுகடத்தினார்.
ரபதாவில் பசி தாகம் முதலானவற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அபூதர் அவர்கள் பல இன்னல்களையும் சேகங்களையும் அனுபவித்து இறுதியில் ஹிஜ்ரி 32ம் ஆண்டு நாடுகடத்தப்பட்ட அவ்விடத்திலேயே மரனமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அபூதர் (ரழி) அவர்களைப் பற்றியும் அவர்களது சிறப்புக்கள் பற்றியும் புகழ்ந்துரைக்கப்பட்ட பல ஹதீஜ்கள் ஹதீஸ் கிரந்தங்களில் அதிகமாகக் காணக்கிடைக்கின்றன.
ஹஸ்ரத் அம்மார் பின் யாசிர் (ரழி)
அபூ யக்லான் எனும் புனைப் பெயர் கொண்ட இவர் பனூதஃலபா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த முதலாவது இஸ்லாமியப் பெண் தியாகியான சுமையா என்ற பெண்மணிக்குப் பிறந்தார்கள். அம்மார் (ரழி) அவர்களும், அவர்களின் பெற்றோர்களும் முதலாவதுஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் அடங்குவர். ஹஸ்ரத் அம்மார் அவர்கள் ஏழாவது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அவர்களின் தாயாரான அன்னை சுமையா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக குறைஷிக் காபிர்களின் சித்திரவதைக்குற்படுத்தப்பட்டு இஸ்லாத்திற்காக உயிர்த் தியாகம் செய்தார்கள். அம்மார் (ரழி) அவர்களைப் பற்றி புகழ்ந்துரைத்த அண்ணல் நபிp (ஸல்) அவர்கள் அம்மார் பரிபூரண ஈமான் உடையவர் எனக் கூறியுள்ளார்கள். இஸ்லாத்திற்காக தன்னையே வித்திட்ட அம்மார் (ரழி) அவர்கள் நபிகளாரோடு பல போர்களில் கலந்து கொண்டார்கள்.
நபிகளாரின் வபாத்திற்குப் பின் ஹஸ்ரத் அலி அவர்களின் படையில் சேர்ந்து ஜமல் சிப்பீன் போன்ற யுத்தங்களில் பங்கு பற்றினார்கள். ஈற்றில் சிப்பீன் யுத்தத்தில் ஹஜ்ரி 38ஸபர் மாதம் பிறை 9ல் முஆவியாவின் படையினரால் கொலை செய்யப்பட்டார்கள்.அம்மாரை அழிச்சாட்டியம் செய்யக் கூடிய ஒரு படையினர் கொலை செய்வார்கள்என நபி (ஸல்) அவர்கள் ஏற்கனவே நவின்றிருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆதாரம்: முரவ்விஜுதஹப் மஸ்ஊதி, பாகம்:2 பக்கம்:21,22
முஹம்மத் பின் ஹுதைபா (ரழி)
அபுல் ஹாசிம் எனும் புனைப் பெயரால் அழைக்கப்படும் இவர் உத்பா பின் ரபீஆ அல் அப்ஷம் என்பவரின் மகனாவார். இவரின் தாயார் ஸஹ்லா பிந்து சுஹைலா பின் அம்ரு ஆமிரிய்யா என்பவராவார். முஹம்மத் பின் அபீ ஹுதைபா அண்ணல் நபியின் அரும் பெரும் ஸஹாபாக்களில் ஒருவராக இருந்து ஹஸ்ரத அலியின் கவர்னராக எகிப்து நாட்டில் கடமை புரிந்தார். இவர் அலியின் படையசை; சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ருஷ்தீன் என்ற கலீபா முஅவியாவின் அடிமையால் படுகொலை செய்யப்பட்டார். ஆதாரம்: தபரி, இப்னு அதீர் (ஹிஜ்ரி 30,36ம் ஆண்டு நிகழ்வுகள்)
ஹஸ்ரத் அப்துர் ரஹ்மான் பின் உதைஸ் பல்லீ
இவர் பைஅதுஷ் ஷஜராவில் கலந்து கொண்டவர். ஏகிப்தை வெற்றி கொண்ட படையிலும் இவர் கலந்து கொண்டு அங்கு ஒரு பிரதேசத்தை அபிவிருத்தி செய்து அதன் உரிமையாளராக மாறினார். பின்னர் கலீபா உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட படையினருக்குப் பொருப்பாளராக இருந்தார்.
கலீபா முஆவியா எகிப்து கவர்னராக இருந்த முஹம்மத் பின் ஹுதைபாவோடு சமாதான உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினார். குலீபா இந்த உடன்படிக்கையின் பலனாக ஒரு திட்டத்தைக் கையாண்டு அப்துர் ரஹ்மான் பின் உதைஸை பலஸ்தீனப் பிரதேசத்;திற்;கு நாடு கடத்தி அங்கு சிறையிலடைக்க வேண்டினார். ஹிஜ்ரி 36ல் அப்துர் ரஹ்மான் பின் உதைஸ் சிறையிலிருநிது தப்பி ஓடினார். இதையறிந்த கலீபா முஆவியாவின் படையினர் அவரை தேடி மீண்டும் கைது செய்து சிறையில் வைத்து கொலை செய்து விட்டனர். ஆதாரம்: தபரி, இப்னு அதீர் (ஹிஜ்ரி 30,36ம் ஆண்டு நிகழ்வுகள்)
ஹஸ்ரத் முஹம்மத் பின் அபூபக்கர்
இவரின் தாய் அஸ்மா பின் உமைஸ் கஸ்அமிய்யா ஆவார். ஆஸ்மா ஏற்கனவே ஜஃபர் பின் அபீதாலிபை மணந்திருந்தார். ஜஃபர் பின் அபீ தாலிபின் வீரமரணத்துக்குப் பின் முதலாவது கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். ஹஜ்ஜதுல் விதாவுக்காக மக்காவை நோக்கி வரும் வழியில் அஸ்மா முஹம்மதை பிரசவித்தார். கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களின் மறைவுக்குப் பின் முஹம்மத் ஹஸ்ரத் அலியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். ஜமல் (ஒட்டகை) யுத்தத்தில் ஹஸ்ரத் அலியின் தரைப் படைக்கு தளபதியாக கடமையாற்றினார்
பின்னர் சிப்பீன் யுத்தத்திலும் ஹஸ்ரத் அலியின் படையில் பணிபுரிந்தார். சிப்பீன் யுத்தத்திற்குப் பின் ஹஸ்ரத் அலியின் கவர்னராக முஹம்மத் எகிப்துக்கு ஹிஜ்ரி 37ல் அனுப்பப்பட்டார். எகிப்து நாட்டை முஹம்மதிடமிருந்து கைப்பற்ற கலீபா முஆவியா அம்ரு பின் ஆஸ் என்பவரின் தலைமையில் அங்கு அனுப்பினார். ஹிஜ்ரி 38ல் அம்ரு பின் ஆஸின் படை எகிப்தை முஹம்மதிடமிருந்து கைப்பற்றி முஹம்மதை கொலை செய்தும் விட்டது. ஆதாரம்: தபரி, இப்னு அதீர் (ஹிஜ்ரி 37, 38ம் ஆண்டு நிகழ்வுகள்)
ஹஸ்ரத் ஸஃஸஅதுப்னு சூஹான் அப்தி
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இவர் சிப்பீன் யுத்தத்தில் ஹஸ்ரத் அலியின் படையில் சேர்ந்திருந்தார். கலீபா முஆவியா கூபா நகரில் தன் அதிகாரத்தைப் பெற்றதும் ஸஃஸஅதுப்னு சூஹானை பஹ்ரைனுக்கு நாடு கடத்தினார். அங்கேயே அவரது மரணம் நிகழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
ஹஸ்ரத் மாலிக் அஷ்;தர்
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த இவர் தாபிஈன்களில் மிக நம்பிக்கைக்குரிய ஒருவராக திகழ்கின்றார். மாலிக் அஷ்தர் தனது கோத்திரத்தின் தலைவராக இருந்தார். யர்மூக் என்ற யுத்தத்தில் இவரது கண்கள் பாதிக்கப்பட்டமையால் மக்கள் இவரை அஷ்தர்என்று அழைத்தனர்.
ஜமல் சிப்பீன் போன்ற யுத்தங்களில் ஹஸ்ரத் அலி அவர்களின் படையில் சேர்ந்து கடமை புரிந்தார். ஹிஜ்ரி 38ல் ஹஸ்ரத் அலி அவர்கள் மாலிக் அஷ்தரை எகிப்து நாட்டின் கவர்னராக நியமித்தார்கள். அவர் அந்நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போதுகல்ஸம் (செங்கடல்) என்ற இடத்தில் வைத்து நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு இவ் உத்தமர்களின் வரலாற்றைக் காணமுடிகின்றது.
அப்துல்லா இப்னு ஸபா, ஸபஈன்கள் ஆகியோர் யார் என அறிந்த நாம் இச்சம்பவத்தைக் கூறியவர்கள், அல்லது இட்டுக் கட்டியவர்கள், இதை அறிவித்த ராவிகள் எப்படியானவர்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முக்கியமானதாகும்.
அப்துல்லாஹ் பின் ஸபா பற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர்கள்
சுமார் பனிரெண்டு நூற்றாண்டுகால வரலாற்றாசிரியர்கள் அப்துல்லா பின் ஸபா பற்றி கூறி வந்துள்ளனர். ஸகாபாக்கள் பற்றி ஆய்வு எழுத முனையும் சிலர் அப்துல்லாஹ் இப்னு ஸபா பற்றியும் எழுதி இதன் வரலாற்றை நீண்டதாகக் காட்ட முனைகின்றனர். இது பற்றிய முன்னைய எழுத்தாளர்களுக்கும், தற்கால எழுத்தாளர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் யாதெனில் முன்னைய எழுத்தாளர்கள் இதனை புனையப்பட்ட ஹதீஸ் ரூபத்திலே சமூகத்துக்கு அறிமுகப்படுத்தினர். தற்கால எழுத்தாளர்கள் அறிவியல் ஆய்வுகள் எனும் சாயத்தைப் பூசி எழுதி வருகின்றனர். எனவே அறிவியல் ரீதியாக இக்கட்டுக்கதையை ஆராய வேண்டுமாயின் இதனை எழுதிய எழுத்தாளர்களையும், அறிவித்த அறிவிப்பாளர்களையும் ஆராய்ந்து பார்ப்பது கடமையாகும்.
ஆய்வு 1:1
செய்யித் ரஷீத் ரிழா (இறப்பு ஹிஜ்ரி 1356)
பிரசித்தி பெற்ற வரலாற்றாசிரியர்களுள் ஒருவரான இவர் தனது அஷ்ஷீஅது வஸ்ஸுன்னா என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார். நான்காம் கலீபா அலியிப்னு அபீதாலிப் அவர்களின் பெயரில் அரசியல் கொந்தளிப்புகளையும், தீனில் பிளவுகளையும் ஏற்படுத்த ஷீஅயிசம் உருவானது. இவ் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தவர் அப்துல்லா இப்னு ஸபா எனும் யஹுதியாவார். இவர் பல சதித்திட்டங்களோடு இஸ்லாத்தில் நுழைந்தார்.
தன்னை வெளியில் ஒரு முஸ்லிமாகக் காட்டிக் கொண்ட இவர் அலியிப்னு அபீதாலிப் (ரழி) அவர்களை அத்துமீரிப் புகழும்படி மக்களைப் பணித்தார்கள். ஈற்றில் மக்களின் ஒற்றுமையை சீர் குழைத்து அவர்களின் நல்வாழ்வையும் வலுவிலக்கச் செய்தார். அஷ்ஷீஅது வஸ்ஸுன்னா, பக்கம்: 4.6
மேற்கண்டவாறு இவர் தனது நூலில் இப்னு ஸபா பற்றி விபரித்துள்ளார். இச்சம்பவத்துக்குரிய ஆதாரம் என்ன என்று அவரிடம் வினவுமிடத்து அவர் கூறும் பதில் இதுதான்: ஜமல் யுத்தத்தின் உண்மை நிலையை அறிய விரும்பினால் இப்னு அதீர் மூன்றாம் பாகம் 95:103 வரையுள்ள பக்கங்களைப் பார்க்கவும். ஆதில் ஸபஈன்களைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். எனவே இதிலிருந்து தெளிவாக விளங்குவது யாதெனில் தான் அறிவித்த இப்னு ஸபா கதைக்கு காமில் இப்னு அதீரையே இவர் ஆதாரம் காட்டியுள்ளார் என்பதாகும்.
ஆய்வு 1:2
அபுல் ஃபிதாஃ (இறப்பு ஹிஜ்ரி 732)
இவர் தனது அபுல் முஹ்தஸர் என்ற நூலில் இச்சம்பவ நிகழ்வை வேறு விடயங்களோடு சேர்த்துக் கூறியுள்ளார். தனது முன்னுரையில் நூலுக்குரிய உசாத்துணை நூல்கள் பற்றி குறிப்பிடும் இவர் எனது நூல்ல் கூறப்பட்ட யாவும் ஐஷஹ் இஸ்ஸுத்தீன் அலி (இப்னு அதீர் ஜஸரி) எமுதிய காமில் இப்னு அதீர் நூலை சுருக்கமாக எமுதியதுதான் எனது முஹ்தஸர் நூலாகும் எனவும் கூறுகின்றார்.
எனவே செய்யித் ரஷீத் ரிழாவும், அபுல் ஃபிதாஃவும் இப்னு ஸபா பற்றிய விடயத்தை இப்னு அதீரிடமிருந்தே பெற்று தங்களது நூற்களில் எழுதியுள்ளனர் என்பது புலனாகின்றது. தற்போது இப்னு அதீர் இவ்விடயத்தை எங்கிருந்து பெற்றுக் கொண்டார் என்பதை நாம் அறிய வேண்டும்.
ஆய்வு 1:3
இப்னு அதீர் (இறப்பு ஹிஜ்ரி 630)
இப்னு அதீர் அப்துல்லா இப்னு ஸபா பற்றிய விடயத்தை தனது நூலில் பரிபூரணமாக எழுதியுள்ளார். ஆனால் அதை எங்கிருந்து பெற்றுக் கொண்டார் என்பது பற்றி அவர் குறிப்பிட வில்லை. மாறாக தனது தாரீகுல் காமில் எனும் வரலாற்று நூலுக்கானமுன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
நான் இந்நூலில் கூறியுள்ள விடயங்களை இமாம் அபூஜஃபர் முஹம்மத் தபரியின் பெரிய வரலாற்று நூலிலிருந்தே எடுத்தெழுதியுள்ளேன். ஏனெனில் அவரின் பிரசித்தி பெற்ற வரலாற்று நூல் முஸ்லிம்களிடையே நம்பத் தகுந்த ஒன்றாக விளங்குகின்றது. முஸ்லிம்களுக்கு மத்தியில் வரலாற்று விடயம் ஒன்றில் பிணக்கு ஏற்பட்டால் அதற்கான தெளிவைப் பெற இமாம் தபரியின் நூலையே நான் நாடுவேன்.
ஏனவே நானும் அவர் அறிவித்துள்ள அனைத்து விடயங்களையும் எனது நூலில் எழுதியுள்ளேன். இவ்விரு நூலுக்கும் வித்தியாசம் இருப்பதற்காக அவர் ஒரு சம்பவத்தில் பலதரப்பட்ட ரிவாயத்துக்களைக் கூறியுள்ளார்.
ஆனால் நான் அவற்றை ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் முறைப்படியாக கூறியுள்ளேன் இவ்வாறு கூறிக் கொண்டு வரும் இப்னு அதீர் தொடர்கையில் ஸஹாபாக்களின் வரலாற்று சம்பவங்களை இமாம் தபரி அறிவித்தது போன்று எவ்வித கூட்டல் குறைத்தல் இல்லாமல் அவரின் நூலிலிருந்து அறிவித்துள்ளேன். ஆனால் சில இடங்களில் பெயர்களில் விளக்கக் குறைவு உள்ளதால் அவற்றை சற்று விபரித்துள்ளேன் எனக் கூறுகின்றார். தாரீகுல் காமில் பக்கம்:5 (எகிப்திய பதிப்பு)
எனவே இப்னு அதீரின் கூற்றுப் பிரகாரம் அவர் இப்னு ஸபா பற்றிய தனது கூற்றை இமாம் தபரியின் வரலாற்று நூலிலிருந்து எடுத்தெழுதியுள்ளார் என்பது புலனாகின்றது.
ஆய்வு 1:4
இப்னு கதீர் (இறப்பு ஹிஜ்ரி 774)
இவர் தனது அல்பிதாயா வந்திஹாயா என்ற தனது நூலினது ஏழாம் பாகத்தின் 167ம் பக்கத்தில் செய்ஃப் பின் அம்ரு அறிவித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார். கலீபா உதுமானுக்கெதிராக தோன்றிய புரட்சிக்கு காரண கர்த்தாவாக இருந்தவர் அப்துல்லா இப்னு ஸபா என்ற யூதனாவான். ஏனெனில் அவன் தன்னை ஒரு முஸ்லிமாகக் காண்பித்துக் கொண்டு எகிப்துக்குப் போனான். ஆங்கு புனையப்பட்ட சில ஹதீஸ்களை கலீபா உதுமானுக்கெதிராக கூறினான் இப்னு கதிர் இவ்விடயத்தை பூரணமாகக் கூறிவிட்டு அதன் முடிவில் இதுவரை நான் கூறியது இமாம் தபரி அறிவித்துள்ளதின் சுருக்கமாகும் எனக் கூறியுள்ளார்.
எனவே இப்னு கதீரும் அப்துல்லா இப்னு ஸபா பற்றிய நிகழ்வை இமாம் தபரியிடமிருந்தே அறிவிப்பு செய்துள்ளார் என்பது தெளிவாகின்றது.
ஆய்வு 1:5
இப்னு கல்தூன்
இவரும் இப்னு கதீர் போன்று தனது வரலாற்று நூலான அல்முப்ததஃ வல்கபர் எனும் நூலில் கலீபா உதுமானின் கொலை மற்றும்,ஜமல் யுத்தம் போன்றவற்றை கூறிக் கொண்டு வருகின்ற நேரத்தில் இப்னு ஸபா பற்றிய விடயத்தையும் அறிவிப்புச் செய்கின்றார்.
இது பற்றி அவர் தனது நூலினது இரண்டாம் பாகத்தில் 425ம் பக்கத்தில் இவ்வாறு கூறுகின்றார்: ஜமல் யுத்தம் பற்றிய சம்பவத்தை நான் இமாம் தபரியின் நூலிலிருந்தே பெற்றேன். ஏனெனில் இமாம் தபரி நம்பத்தகுந்தவர் என்பதாலும், இப்னு குதைபா போன்றோர்அவரின் நூலை மேற்கோள் காட்டுவதாலும் அது எமக்கு ஆதாரமாகும் என்கிறார்.
மேலும் இரண்டாம் பாகத்தில் 475ம் பக்கத்தில் அவர் இவ்வாறு கூறுகின்றார். இஸ்லாமிய கிலாபத், மதம்மாறி முர்தத்தாகியவர்களின் வரலாறு கலீபாக்களின் இஸ்லாமிய பிரசாரத்தின் கீழ் நடந்த வெற்றிகள், நாடு பிடிப்புகள், யுத்தங்கள், முஸ்லிம்களின் ஒற்றுமை நிகழ்வுகள் போன்றவை அனைத்தையும் இமாம் தபரியின் வரலாற்று நூலிலிருந்து சுருக்கமாக எடுத்துள்ளேன். ஏனெனில் தபரியின் நூல் ஏனைய வரலாற்று நூற்களை விட நம்பத்தகுந்ததாகும்
எனவே வரலாற்றாசிரியர் இப்னு கல்தூன் அவர்களும் இவ்விடயத்தை தபரியிடமிருந்தே அறிவித்துள்ளார் என்பது தெளிவாகின்றது.
ஆய்வு 1:6
ஃபரீத் வஜ்தி
இவர் தனது தாயிரதுல் மஆரிபீன் எனும் நூலின் 7ம் பாகத்தில் அதம் என்ற சொல்லின் கீழ் ஜமல் யுத்தம் பற்றி விபரித்து விட்டு இப்னு ஸபா பற்றிக் கூறியுள்ளார். அதன் இறுதியில் (160,168, 169ம் பக்கங்களில்) இவ்விடயங்களுக்கான ஆதாரம் தபரி என்கிறார்.
ஆய்வு 1:7
புஸ்தானீ (இறப்பு ஹிஜ்ரி 1300)
இவர் தனது தாயிரதுல் மஆரிப் என்ற நூலில் அப்துல்லா இப்னு ஜபா என்ற சொல்லுக்குக் கீழ் இப்னு ஸபா சம்பவத்தைக் கூறி அதனை இப்னு கதீரின் வரலாற்று நூலிலிருந்து பெற்றதாகக் நுறியுள்ளார்.
ஆய்வு 1:8
அஹ்மத் அமீன்
இவர் அறிவியல் ஆய்வு என்ற ரீதியில் இப்னு ஸபா பற்றி எழுதியுள்ளவாகளில் ஒருவர். இவர் தனது ஃபஜ்ருல் இஸ்லாம் எனும் நூலில் ஷீயாக்களோடு கொண்டுள்ள பகைமையின் காரணமாக ஷீயாக்களின் ஸ்தாபகர் அப்துல்லா இப்னு ஸபாதான் எனக் காட்ட முனைந்துள்ளார். இவர் தனது கூற்றுக்கு தபரியையும், வெல்ஹாவ்ஸன்னையும் ஆதாரம் காட்டியுள்ளார். வெல்ஹாவ்ஸன்னும் தபரியிடமிருந்தே இப்னு ஸபா எனும் கதையை அறிவிப்புச் செய்துள்ளார் என்பதை பின்னர் காண்போம்.
ஆய்வு 1:9
ஹஸன் இப்றாஹீம்
இவர் பகுப்பாய்வு ரீதியில் வரலாறை ஆய்வு செய்தவர்களில் ஒருவராவார். ஏகிப்த்து பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக கடமையாற்றும் இவர் தாரீகுல் இஸ்லாமிஸ் ஸியாஸிய்யி எனும் வரலாற்று நூலை எழுதியுள்ளார். அதில் இப்னு ஸபா பற்றிய விடயத்திற்கு தபரியையே ஆதாரமாகக் குறிப்பட்டுள்ளார். முஸ்லிம் அல்லாத வரலாற்றாசிரியர்களில் பான், பறூற்றன், நைக்கில்ஸன்,ஹோட்டஸ்மேன், கீப் போன்றோர் இப்னு ஸபா பற்றிய விடயத்தை நேரடியாக தபரியிடமிருந்தே பெற்றுள்ளனர் என்பதை தத்தம் நூற்களில் மேற்கோள் காட்டியுள்ளனர்.
டேவிட் டொனால்ட்ஸன் என்பவர் தாயிரதுல் மஆரிபில் இஸ்லாம் என்ற நூலிலிருந்து இப்னு ஸபா பற்றி எடுத்தெழுதியுள்ளார். தாயிரதுல் மஆரிபில் இஸ்லாம், இதனை தபரியிடமிருந்தே பெற்றுள்ளது என்பது ஏற்கனவே நிரூபணம் ஆகியுள்ளது.
ஆய்வு 2:1
இப்னு அஸாகிர் (இறப்பு ஹிஜ்ரி 581)
தபரிக்கு அடுத்ததாக இப்னு ஸபா பற்றிய நிகழ்வை பிறிதோர் ஸனதோடு அறிவித்தவர்தான் இப்னு அஸாகிர். இப்னு அஸாகிர் தனது தாரீகுல் மதீனா வதிமிஷ்கு என்ற 80 பாகங்கள் கொண்ட வரலாற்றுக் கிரந்தத்தில் தல்ஹா (ரலி) யின் வாழ்க்கைச் சரிதையை விபரிக்கும் போது இப்னு ஸபா பற்றிய நிகழ்வையும் கூறுகின்றார். இவரும் செய்ஃபிடமிருந்தே இப்னு ஸபா பற்றிய விடயத்தைப் பெற்றுள்ளார் எனத் தெளிவாகின்றது.
இவரது அப்துல்லா பின் ஸபாவுக்கான தொடர் இவ்வாறு அமைகின்றது:
இப்னு அஸாகிர்: அபுல் காசிம் ஸமர்கந்தீ: அபுல் ஹுஐஸன் நுகூர்: அபூதாஹிர் முக்லிஸ்: அபூபக்கர் பின் செய்ஃப் சிர்ரி: ஷுஅய்ப்: செய்ப் பின் அம்ர் தமீமி. ஏனவே இப்னு அஸாகிரின் ஸனதும் செய்ப் பின் அம்ரிலேயே முற்றுப் பெறுகின்றது.
ஆய்வு 2:2
இப்னு அபீபக்கர் (இறப்பு 741)
இவர் தனது அத்தம்ஹீத் என்ற நூலில் இப்னு ஸபா பற்றிய விடயத்தை செய்ஃப் அம்ர் தமீமியின் அலபுதூஹ் எனும் நூலிலிருந்தும்,இப்னு அதீரின் வரலாற்றுக் கிரந்தத்திலிருந்தும் எடுத்தெழுதியுள்ளார். ஏற்கனவே இப்னு அதீர் தபரியிடமிருந்தே இதனைப் பெற்று எழுதியுள்ளார் எனத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
ஆய்வு 2:3
ஸயீத் ஆப்கானி
இவர் இப்னு ஸபா விடயத்தை தனது ஆயிஷது வஸ்ஸியாஸா என்ற நூலில் எழுதியுள்ளார். இவர் இவ்விடயத்திற்கு தபரி இப்னு அஸாகிர் இப்னு அபீபக்கர் போன்றோரின் நுஸற்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியுள்ளார்.
ஆய்வு 2:4
தஹபி (இறப்பு ஹிஜ்ரி 748)
இவரும் தனது தாரீகுல் இஸ்லாம் எனும் நூலில் இப்னு ஸபா பற்றிய விடயத்தை செய்ஃப் பின் அம்ர் தமீமியின் அல்புதூஹ் என்ற நூலிலிருந்தும் தபரியிடமிருந்தும் மேற்கோள் காட்டியுள்ளார்.
இது வரை கூறப்பட்ட தகவல்களின் படி அனைத்து வரலாற்றாசிரியர்களும் இப்னு ஸபா பற்றிய நிகழ்வை ஏதோ ஒரு வகையில் அனைவரும் செய்ஃப் பின் அம்ர் தமீமியின் அறிவிப்பை ஆதாரமாக வைத்தே தங்களது கிரந்தத்தில் பதிவு செய்துள்ளனர்.
அப்துல் இப்னு ஸபா பற்றிய உண்மை நிலை என்ன?
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இப்னு ஸபா பற்றிய விடயம் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வருகின்றது. இவ்விடயத்தைக் கூறியவர் செய்ஃப் பின் அம்ர் தமீமி கூபி என்பவராவார். வுரலாற்றாசிரியர்கள் அனைவரும்இவரிடமிருந்தே இப்னு ஸபா பற்றிய நிகழ்வை அறிவிப்புச் செய்துள்ளனர்.
எனவே செய்ஃப் பின் அம்ர் தமீமி கூபி என்பவரை நாம் ஆராய்வது அவசியமாகும். ஏனெனில் இவ்விடயத்தின் யதார்த்த நிலையை அறிவதற்கு அவரைப் பற்றி அறிவத இன்றியமையாத ஒன்று என்பதில் ஐயமில்லை. அதன் பின்பே அவரினால் அறிவிக்கப்பட்ட இவ்விடயங்களின் உண்மை நிலைகளை நாம் உணர முடியும்.
செய்ஃப் பின் உமர் என்பவர் யார்?
செய்ஃப் பின் உமர் தமீமி என்பவர் தமீம் வம்சா வழியில் தோன்றிய உஸைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர். இவரை உஸைதி தமீமி என்று அழைக்கப்படும். கூபா நகரம் இவரது வசிப்பிடமாக இருந்தது. ஹிஜ்ரி 170க்குப் பின் கலீபா ஹாரூன் ரஷீதின் காலத்தில்இவரது மரணம் நிகழ்ந்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.
செய்ஃப் பின் உமர் தமீமியின் அறிவிப்புகள்
பொதுவாக வரலாற்றாசிரியர்கள் ஒரு வரலாற்று நிகழ்வை ஸனதோடு அறிவிப்பது போன்று செய்ஃப் பின் உமரும் தனது அறிவிப்புகளுக்கு மேல்வாரியாக உறுதிப்படுத்த, உண்மை சாயம் பூச முனைந்துள்ளார்.
இதற்காக இட்டுக்கட்டப்பட்டகதைகளைப் பல பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி பொய்யான ஸனதுகளை உருவாக்கியுள்ளார். இவ்வகையில் அவரால் தொகுக்கப்பட்ட சில நூற்களைக் கவனியுங்கள்!
1) அல்புதூஹுல் கபீர் வர்ரித்தா இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்திலிருந்து உதுமான் (ரலி) அவர்களது ஆட்சிக்காலம் வரை நடந்த நிகழ்வுகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் தான் அபூபக்கர் (ரலி) தனது கிலாபத்தை ஏற்க மறுத்தவர்களோடுமேற்கொண்ட போர் பற்றிய தகவல்களும் கூறப்பட்டு அப்போருக்கு மதம் மாரியவர்களுடனான போராட்டம் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கடத்ததாக முஸ்லிம்களுக்கு ரோம், பாரசீகம், பாலஸ்தீன்,ஷாம் (சிரியா) போன்ற இடங்களில் ஏற்பட்ட வெற்றிகளை பல உண்மைக்குப் புறம்பான விடயங்களையெல்லாம் எழுதி அவைகளுக்கு உண்மை சாயம் பூச முனைந்துள்ளார்கள்.
2) அல்ஜமல் வமஸீரு ஆயிஷா, வஅலி: இந்நூலில் உதுமான் (ரலி) இவர்களுக்கெதிராக கிளர்ச்சி ,அவர் கொலை செய்யப்பட்ட விதம், ஜமல் யத்தம் போன்றவைகள் எழுதப்பட்டுள்ளன. இந்நூலின் அறிவிப்புக்களை ஆராயும் போது இந்நூல் பனீஉமையாக்களுக்குஆதரவாக எழுதப்பட்டுள்ளது என்பதை புரிய முடிகின்றது.
மேற்கூறப்பட்டவை மடடுமல்லாது செய்ஃப் பின் உமர் தமீமியால் பல கற்பனைகளை புனைந்து எழுதப்பட்டு, அவைகள் வரலாற்றுக் கிரந்தங்களிலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அத்துடன் இன்று அவைகளை முஸ்லிம்களே மேற்கோள் காட்டும் ஆதாரங்களாகவும் மாறிவிட்டன.
மிர்கொந், கியாத்துத்தீன் போன்றோர் இப்னு ஸபா பற்றிய விடயத்தை ஆதார நூலைக் கூறாமல் எழுதியுள்ளனர். ஆனால் இதன் வடிவம் தபரியில் கூறப்பட்டதற்கு ஒப்பாகவே அமைந்துள்ளது.
இதுவரை, இஸ்லாமிய, பிறமத வரலாற்றாசிரியர்கள் யாவரும் தங்களது நூற்களில் இவ்விடயத்திற்கு இமாம் தபரியையே மேற்கோள் காட்டியுள்ளனர் என்பதை அறிந்தோம். தற்போது தபரி எங்கிருந்து இதனைப் பெற்றார் என்பதையும், அதற்குரிய அறிவிப்பாளர்கள் யாவர் என்பதையும் அறிய வேண்டும். இன்ஷா அல்லாஹ்
இப்னு ஸபா பற்றிய விடயத்தக்கான தபரியின் அறிவிப்பாளர் (ஸனத்) வரிசை
அபூஜஃபர் முஹம்மத் பின் தபரி (இறப்பு ஹிஜ்ரி 310) ஸபஈன்கள் பற்றி தனது தாரீகுல் உமமி வல்முலூக் என்ற நூலில் செயஃப் பின் உமர் தமீமி என்ற அறிவிப்பாளரிடமிருந்து மாத்திரம் இவ்விடயத்தை அறிவிப்புச் செய்துள்ளார்.
ஹிஜ்ரி 30ல் கலீபா முஆவியா ஹஜ்ரத் அபூதர் கெப்பாரி அவர்களை மதீனாவிலிருந்து அறிவிப்புச் செய்யும் செய்ஃப் பின் உமர் குறிப்பிடத்தக்க ஒரு விடயத்தையும் அறிவிப்புச் செய்கின்றார். இது பற்றி அவர் கூறும் போது:
இப்னு ஸவ்தா (அப்துல்லா பின் ஸபா) ஷாம் பிரதேசத்தை அடைந்து அபூதர் கெப்பாரியை அங்கு சந்தித்தார். அபூதர்ரிடம் ஏ அபூதர்ரே! முஆவியா தகாத பல காரியங்களைச் செய்துள்ளார்என்பது உமக்குத் தெரியுமா? ஏனக் கேட்டார்.
இமாம் தபரி இப்னு ஸபா மற்றும் ஸபஈன்களின் சம்பவங்களை செய்ஃப் பின் உமரிடமிருந்து மாத்திரம் அறிவிப்புச் செய்கின்றார்.
ஜமல் யுத்தம், மற்றும் கலீபா உதுமான் (ரலி) அவர்களின் கொலை சம்பந்தமான விடயங்களை செய்ஃபிடமிருந்து அறிவிப்புச் செய்யும் தபரி, இப்னு ஸபா பற்றிய விடயத்தையும் செய்ஃபிடமிருந்தே அறிவிப்புச் செய்துள்ளார்.
செய்ஃபிடமிருந்து அறிவிக்கும் இந்நிகழ்வை தபரி அவர்கள் பின்வரும் இரு ஸனதுகளோடு அறிவிப்புச் செய்துள்ளார்.
1) உபைத் பின் ஸஃத்ஸுஹ்ரி தனது மாமா யஃகூப் பின் இப்றாஹீமிடமிருந்தும் அவர் செய்ஃப் பின் உமர் தமீமி மூலமும் அறிவிப்புச் அசய்துள்ளனர். தபரி நேரடியாக உபைத் பின் ஸஃதிடமிருந்து அவர் தன்னிடம் கூறியதாக சொல்கிறார்.
2) ஸரீ பின் யஹ்யா ஷுஅய்யிபின் வாயிலாகவும் அவர் செய்ஃப் உமர் தம்மிடமிருந்தும் அறிவிப்புச் செய்துள்ளார்.
செய்ஃப் பின் உமர் தமீமியின் அறிவிப்புகளை அவரின் இரு நூற்களான அல்புதூஹ், அல்ஜமல் போன்றவற்றிலிருந்து தபரி எழுதியுள்ளார்.
எனவே தபரியின் இப்னு ஸபா பற்றிய நிகழ்வின் அறிவிப்பாளர் செய்ஃப் பின் உமர் தமீமி ஆவார் என நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது. தற்போது தபரி அல்லாத ஏனைய வரலாற்றாசிரியர்களின் இப்னு ஸபா பற்றிய ஸனதையும் ஆராய வேண்டியுள்ளது.
தபரி தனது வரலாற்று நூலில் செய்ஃப் பின் உமர் தமீமியால் ரிவாயத்துச் செய்யப்பட்டுள்ள (ஹிஜ்ரி 13 - 33 வரையான) பல நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். தபரிக்கு அடுத்ததாக இப்னு அஸாகிர் என்ற வரலாற்றாசிரியர் டமஸ்கஸை கடந்து சென்றவர்களின் சுயசரிதை பற்றி எழுதும் போது செய்ஃப் பின் உமர் தமீமியின் ரிவாயத்துக்களை அறிவிப்புச் செய்துள்ளார்.
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைப் பற்றி வரலாற்றுக்களை எழுதிய பிரபலமானவர்களில் பின்வருவோரைக் குறிப்பிடலாம்.
1) இப்னு அப்தில் பிர்ரி (இறப்பு 436) நூல்: அல்இஸ்திஆப்
2) இப்னு அதீர் (இறப்பு 630) நூல்: உஸுதுல் காபா பீ மஃரிபதிஸ் ஸஹாபா
3) தஹபி (இறப்பு 748) நூல்: அத்தஜ்ரீத்
4) இப்னு ஹஜர் (இறப்பு 852) நூல்: அல்இஸாபா பீ மஃரிபதிஸ் ஸஹாபா
இவர்களது நூல்களிலும் செய்ஃப் பின் உமர் தமீமியின் கட்டுக்கதைகளை அறிவிப்புச் செய்யும் அறிவிப்பாளர்களே அண்ணல் நபியின் தோழர்கள் என வடிவமைத்து எழுதப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பாளர்களை வரலாற்றாய்வு செய்து பார்க்கும் போது இவர்களில் பலர் இவ்வையகத்துக்கே அடியெடுத்து வைக்காதவர்கள் என்பதை புரிய முடிகின்றது. வெறுமனே செய்ஃப் பின் உமர் தான் இவர்களை உருவாக்கியுள்ளார் என்பதை அறியலாம்.
ஆனால் ஸகாபாக்களின் சரிதைகளை எழுதும் மேற்குரிப்பிட்ட அறிஞர்கள் செய்ஃப் பின் உமரினால் புனையப்பட்ட கதைகளில் சில ஆதாரங்களை அவதானித்து செய்ஃப் பின் உமரின் அறிவிப்புக்களை அறிவித்த ராவிகளை ஸஹாபாக்கள் வரிசையில் சேர்த்து ஸஹாபி எனும் ரீதியில் எழுதியுள்ளனர். ஆனால் இவர்கள் ஸஹாபிகளல்ல.
இஸ்லாமிய நகரங்களில் சமூகவியல் விடயங்களை எழுதியுள்ள யாகூத் ஹமவி தனது முஃஜமுல் புல்தானி என்ற நூலிலும்,சபியுத்தீன் என்பவர் தனது மராசிதுல் இத்திலாஃ என்ற நூலிலும் செய்ஃப் கூறியுள்ள விடயங்களையும் அவர் அறிவித்த நகரங்களின்சரித்திரங்களையும் பதிவு செய்துள்ளனர்.
எனவே செய்ஃப் பின் உமர் அப்துல்லா இப்னு ஸபா பற்றிய கட்டுக்கதையை மாத்திரம் புனையவில்லை. வேறு பல கற்பனைக் கதைகளையும் புனைந்துள்ளார்என்பது அவரது உருவாக்கங்களை ஆராயும் போது தெளிவாகின்றது. அவரால் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் பல ஹதீஸ், தப்ஸீர், வரலாறு, சமூகவியல், மற்றும் இலக்கிய ஏடகளில் காணப்படுகின்றன. செய்ஃப் பின் உமரினது அறிவிப்புகளின் பெறுமானத்தை அறிய அவரைப் பற்றி உலமாஉர் ரிஜால் (அறிவிப்பாளர்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் ரிஜால் கலை உலமாக்கள்) என்ன கூறியுள்ளார்கள் என்பதை அறிந்தால் செய்ஃப் பின் உமர் தமீமியின் அறிவிப்புக்களின் தராதரத்தையும் அதன் உண்மை நிலையையும் புரிந்து கொள்ளலாம்.
செய்ஃப் பின் உமர் தமீமி பற்றி உலமாஉர் ரிஜால்;
1) யஹ்யா பின் முயீன் (இறப்பு ஹிஜ்ரி 233) செய்ஃப் பின் அம்ரின் அறிவிப்புக்கள் யாவும் (ழஈப்) பலவீனமானதாகும்
2) இமாம் நஸாஈ (இறப்பு ஹிஜ்ரி 303) செய்ஃப் பின் அம்ர் தமீமியுடைய அறிவிப்புக்கள் யாவும்(ழஈப்) பலவீனமானதாகும். அவைகள் நிராகரிக்கப்படும். அத்துடன் அவரின் அறிவிப்புக்களை நம்ப முடியாது.
3) இமாம் அபூதாவூத் (இறப்பு ஹிஜ்ரி 275) செய்ஃப் பின் அம்ர் தமீமி மிகவும் பொய் சொல்லக் கூடியவர். ஆவரது அறிவிப்புக்கள் எவ்வித பெறுமதியுமற்றவை.
4) இப்னு அபீ ஹாத்தம் (இறப்பு ஹிஜ்ரி 327) உலமாக்கள் செய்ஃப் பின் அம்ரின் அறிவிப்புக்களை நிராகரித்துள்ளனர்
5) இப்னுஸ் ஸகன் (இறப்பு ஹிஜ்ரி 353) செய்ஃப் பின் அம்ர் தமீமியின் அறிவிப்புக்கள் ழஈபாகும்.
6) இப்னு ஹிப்பான் (இறப்பு ஹிஜ்ரி 354) செய்ஃப் ஹதீஸ்களை புனைபவராவார். தன்னால் புனையப்பட்டஹதீஸ்களை நம்பிக்கைக்குரியவர்களின் வாயினால் சொல்லப்பட்டது என்பார். செய்ஃப் ஒரு ஸிந்தீக் (மதம் மாரியவர்)எனவும், ஹதீஸ் புனைபவர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
7) தாருக்குத்னீ (இறப்பு ஹிஜ்ரி 385) செய்ஃப் பின் அறிவிப்புக்கள் ழஈபாகும். ஆவரது அறிவிப்புக்களை உலமாக்கள் நிராகரித்துள்ளனர்
8) காஹிம் நைஸாபூரி (இறப்பு ஹிஜ்ரி 405) செய்ஃப் பின் அம்ரின் ஹதீஸ்களை உலமாக்கள் நிராகரித்துள்ளனர். அவர் ஸிந்தீக் (மதம் மாறியவர்) எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
9) காமுல் நூலின் ஆசிரியரான ஃபிருஸ் ஆபாதி (இறப்பு ஹிஜ்ரி 817) செய்ஃப் பின் அறிவிப்புக்கள் பலவீனமானவையாகும்
10) இப்னு ஹஜர் (இறப்பு ஹிஜ்ரி 882) செய்ஃப் பின் அறிவிப்புக்கள் ழஈப் (பலவீனமானவையாகும்)
11) சுயூதி (இறப்பு ஹிஜ்ரி 911) செய்ஃப் பின் அறிவிப்புக்கள் மிகமிக (ழஈப்) பலவீனமானவையாகும்
12) ஸபியுத்தீன் (இறப்பு ஹிஜ்ரி 923) செய்ஃப் பின் அம்ரை உலமாக்கள் பலவீனமானவர் என்று கருதியுள்ளனர் இவ்வாறு பல முக்கிய அறிஞர்கள் செய்ஃப் பின் அம்ர் தமீமியின் வாழ்க்கைச் சரிதை பற்றி கூறியுள்ளனர். விரிவாக இவரைப்பற்றி அறிய பின்வரும் நூற்களைநாம் அவதானிக்கலாம்.
1. பெஹ்ரிஸ்து இப்னு நதீம்
2. அல்ஜரா வத்தஃதீல்
3. இஸ்திஆப் பாகம் 4 பக்கம் 252 (கஹ்காஹ் சரிதைத் தொடரில்)
4. அல் இஸாபா பாகம் 4 பக்கம் 175 (அபூமிஹ்ஜன் சரிதைத் தொடரில்)
(4ஃ 386 லிபாபா சரிதைத் தொடரில்)
5. மீஸானுல் இஃதிதால் (தஹபி பாகம்: 1 பக்கம் 438)
6. தஹ்தீபுத் தஹ்தீப் (இப்னு ஹஜர் பாகம் 4 பக்கம் 295)
7. குலாசதுத் தஹ்தீப் (ஸபீஉத்தீன் பக்கம் 126)
8. ஹிதாயத்துல் ஆரிபீன் (இஸ்மாயீல் பக்தாதீ பாகம் 1 பக்கம் 413)
9. கஷ்புல் ஜனூன் (ஹாஜி கலீபா பக்கம் 124)
10. தாஜுல் உரூஸ் (சுபைதீ)
எனவே இதுவரை நாம் கண்ட ரிஜால் கலை உலமாக்களின் கருத்துப்படி செய்ஃப் பின் உமர் தமீமி (ழஈப்) பலவீனமான ராவி என்பதை அறிந்தோம். ஆகவே அவர் அறிவிக்கும் எந்த ஒரு அறிவிப்பும் பெருமதியற்றதாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவுமே இருக்கும் என்பது திண்ணம்.
கலீபா உதுமான் ஹஸ்ரத் அலி போன்றோரின் காலங்களில் அப்துல்லா இப்னு ஸபா என்ற ஒரு பெயருள்ள மனிதர் இருந்திருந்தால் அரேபிய சமூகம் அவரது தந்தை மூதாதையர் ஆகியோரது பெயர்களோடு அவரைக் குறிப்பிட்டிருப்பர். ஏனெனில் பொதுவாக அரேபியர் தங்களது பெயரை தங்களது மூதாதையர்களோடு தொடர்புபடுத்திக் கூறுவார்கள். அதேநேரம் சில வரலாற்றுநூற்களில் அப்துல்லா பின் வஹ்பிர் ராஸிபி என்பவர் அப்துல்லா பின் ஸபா என்று அழைக்கப்படுகின்றார்.
ஆனால் இவர் ஏற்கனவே யமனில் பிறந்து யூதனாக இருந்தவர். இவரது வரலாற்றில் அலிக்கும் ஆதரவாக குரல் கொடுத்தவர்,அல்லது யா சமூகத்தை உருவாக்கியவர் என்பதாகவெல்லாம் கிடையாது. மாறாக இவர் கவாரிஜ்களின் தலைவராக இருந்து அலிக்கெதிராகப் போராடினார். இறுதியில் நஹ்ரவான் யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார். இது பற்றி அன்ஸாபுல் அராஃப் 2-383 அல்லது அத்தூரத் 1-302 ஆகிய ஏடுகளில் விரிவாகக் காணலாம்.
எனவே அப்துல்லா பின் ஸபா என்ற மனிதன் செய்ஃப் பின் உமர் தமீமியின் ஒரு கற்பனை மனிதனே தவிர இவ்வுலகில் தோன்றியவர் அல்ல. இதனடிப்படையில் செய்ஃப் பின் உமர் தமீமியின் அப்துல்லா பின் ஸபா கதை ஒரு கட்டுக்கதை என்பதும், ஒரு கதையாக இட்டுக்கட்டப்பட்டு அண்ணல் நபியின் அஹ்லுல் பைத்தினரை தரம் குறைக்க செய்யப்பட்ட ஒரு சதி என்பதையும் சிந்தனை மற்றும் ஆய்வு எனும் ரீதியில் இவ் ஆய்வுரையை படிக்கும் ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்வர்.
எனவே ஹஸரத் நாயகம் (ஸல்) அவர்களது பணிக்கு களங்கம் ஏற்படுத்தவே அப்துல்லா இப்னு ஸபா என்ற பெயரில் ஒரு கதை இட்டுக்கட்டப்பட்டுள்ளது. இது பொய்யானதும், போலியானதுமான ஒரு தவறான வரலாற்றுக் கூற்றாகும்.
எனவே அண்ணல் நபியின் அஹ்லுல் பைத்தினரை தரம் குறைக்க வேண்டுமெனும் வஞ்சக உணர்வோடு உருவாக்கப்பட்ட இக்கட்டுக் கதையை நாம் புறந் தள்ளி உண்மை நிலைகளை உணர்ந்து இறைவனுக்குகந��த நல்லடியார்களாக வாழ முயற்சிப்போமாக!